பயங்கரவாதிகளின் தாக்குதல் – அமைச்சர் உட்பட எழுவர் உயிரிழப்பு!
அருணாச்சலபிரதேசம் மேற்கு கோன்சா பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலிற்கு இலக்காகி அமைச்சர் உட்பட ஏழுபேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் அருணாச்சல மாநிலத்தின் தேசிய மக்கள் கட்சியின் அமைச்சர் திரோங் அபோ உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு மேகாலயா மாநில முதலமைச்சர் கன்ராட் சங்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், பயங்கரவாதிகளின் குறித்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.