நல்லாட்சி அரசாங்கம் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது
நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் பொது மக்களிடம் இன்னும் நம்பிக்கை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற சமூர்த்தி வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியவால் பாரிய போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
அதே நேரம் இது பௌத்த நாடு என்றும் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.