தேர்தல் பணியின் போதே உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்குச் சாவடியில் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம்(14) உயிரிழந்தார்.
உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் பாராளுமன்ற தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வாக்குச் சாவடியில் சிறிது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வேறொரு பொலிஸ் உத்தியோகத்தரை நியமித்து பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பகிரவும்...