Main Menu

உங்கள் TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளுக்கான பொதி அனுப்பும் சேவை

எமது வானொலி வர்த்தக நோக்கமற்ற, இலங்கைக்கான பொதி அனுப்பும் சேவையை FACE அமைப்பினூடாக ஆரம்பித்துள்ளது என்பதை எமது அன்பு நேயர்களுக்கு மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.

உங்கள் TRT தமிழ் ஒலி வானொலியின் வளர்ச்சியில் அதீத அக்கறையும் அபிமானமும் கொண்ட நேயர்களாகிய நீங்கள் அதன் வளர்ச்சி பாதையிலும் எம்மோடு ஒன்றிணைந்து பயணிப்பீர்கள் என உறுதியாக நம்புகின்றோம்.

உங்கள் உறவுகளுக்கும் எமது இந்த சேவை பற்றி தெரியப்படுத்துமாறு அன்போடும் உரிமையோடும் எமது நேயர்களை கேட்டுக்கொள்கிறோம்.

அவை தொடர்பான விபரங்களை நீங்கள் பெற்றுக் கொள்ள கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

அத்துடன், உங்கள் பொதிகளை அனுப்புவதற்கான பெட்டிகளை TRTதமிழ் ஒலி கலையகத்தில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பொதியினுள் உள்ளடக்கப்பட்ட அனைத்து பொருட்களின் விபரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

முக்கிய குறிப்பாக, சுங்க இலாகாவினால் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் உங்கள் பொதிகளில் உள்ளடக்கப்பட அனுமதிக்கப்பட மாட்டாது.

எமது பொதிகள் அனுப்பும் சேவை தற்பொழுது விமான சேவையாக மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.அதன் விபரங்கள் கீழே பார்வையிடவும்.

மேலதிக விபரங்களை அறிய
– 00 33 (0) 1 48 37 16 75

நீங்கள் பொதிகளை ஒப்படைக்க வேண்டிய எமது கலையக முகவரி
TRT TAMIL OLLI (FACE) ஜெட் மார்க்கெட் அருகாமையில்
75 Rue Rateau (Apartment. C-7),
93120 La Courneuve,
France.