சுன்னாகத்தில் பொலிஸாரினால் தாக்கப் பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் – கீதநாத் காசிலிங்கம்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் இளம் தாயொருவரும், அவரது பச்சிளம் குழந்தையும் கணவனும் நேற்றிரவு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் நான் கவலையடைவதுடன், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தாக்குதல் நடத்தியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டி நிற்கின்றேன்.
இந்த சம்பவம் தொடர்பில் பலரும் ஆளும் அரசாங்கத்தை கண்டிப்பதை காண முடிகிறது. ஒரு சில அதிகாரிகள் விடும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறி பயனில்லை. இப்படியான சம்பவம் எமது பொதுஜன பெரமுன அரசாங்க காலத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. அதன்போது பிழை விடும் அதிகாரிகள் மீது சுமத்தவேண்டிய குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினார்கள்.
நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருக்கின்றது என்றார்.
பகிரவும்...