ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் : பசுமைக் கட்சி முன்னிலை
ஐரோப்பிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களித்தோர் எண்ணிக்கை, கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
50 சதவீதமானவர்கள் இம்முறை வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் அந்த எண்ணிக்கை 43 சதவீதமாக காணப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக 28 நாடுகள் காணப்படுகின்றன. ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இம்முறை அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.
ஜேர்மனியைப் பொறுத்தவரை பசுமைக் கட்சி முன்னிலை வகிப்பதாக வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
பிரதமர் மெர்க்கல் தலைமையிலான கட்சிக்கு 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைவான ஆதரவே கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 751 இடங்களுக்கான பொதுத் தேர்தலில் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.