இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியஸ்த பேச்சு வார்த்தையிலிருந்து கட்டார் விலகியுள்ளது
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயற்பட்டுவந்த கட்டார் குறித்த பணியை இடைநிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் தங்கள் விருப்பத்தைக் காட்டும்போது, குறித்த பணிகள் மீண்டும் தொடங்கும் என்று கட்டார் குறிப்பிட்டுள்ளது.
கட்டாரில் ஹமாஸ் பிரதிநிதிகள் இருப்பதை வொஷிங்டன் இனி ஏற்காது என்று சிரேஷ்ட அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து, காசாவில் போரை நிறுத்துவதற்கான புதிய திட்டங்களை பாலஸ்தீனிய குழு நிராகரிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
மத்தியஸ்தப் பேச்சுக்களிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்த போதிலும், டோஹாவில் உள்ள ஹமாஸின் அரசியல் அலுவலகம் இனி அதன் நோக்கத்தை நிறைவேற்றாது என கூறுவது தவறானது எனக் கட்டார் தெரிவித்துள்ளது.
பகிரவும்...