இரவு விடுதிக்கு அருகில் மோதல் – நான்கு காவல் துறையினர் படுகாயம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள இரவு விடுதி ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் நான்கு காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.
துலூசிலுள்ள l’établissement l’Opium இரவு விடுதிக்கு அருகிலேயே நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இரு குழுக்களுக்கிடையிலான வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதனாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதலை கட்டுப்படுத்த முயற்சித்த பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த நால்வரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.