இந்தியா
நாளை தீபாவளி பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து

தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக மக்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள்மேலும் படிக்க...
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. ஒரு நாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன. இவை அனைத்தும் புரளி என்பதால் விமான நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னைமேலும் படிக்க...
அதிமுக வாக்குகளை யாராலும் ஈர்க்க முடியாது- எடப்பாடி பழனிசாமி

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: * கூட்டணி குறித்து கொள்கை அடிப்படையில் தான் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். * அதிமுக சிறப்பாக செயல்படுவதால் தான் அதைப்பற்றி விஜய் விமர்சிக்கவில்லை. *மேலும் படிக்க...
த.வெ.க. மாநாடு பாதுகாப்புக்கு சென்றபோது உயிரிழந்த காவலர்.. ரூ.25 லட்சம் நிவாரண நிதி அறிவித்த முதல்வர்

விக்கிரவாண்டி அருகே த.வெ.க. மாநாடு பாதுகாப்புக்கு சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் சத்தியமூர்த்தி குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையத்தில்மேலும் படிக்க...
100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி

உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா தற்போது ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்மேனியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. உள்நாட்டு மற்றும் சர்வதேச ராணுவத் தளவாட தேவைகளை ஈடுசெய்யும் அளவுக்கு உள்நாட்டில்மேலும் படிக்க...
“விஜய் பேச்சில் புதிதாக ஏதுமில்லை; எல்லாம் ராகுல் ஏற்கெனவே சொன்னதுதான்” – நாராயணசாமி

“தவெக மாநாட்டில் விஜய் புதிய கருத்து எதையும் கூறவில்லை. ராகுல் காந்தி ஏற்கெனவே கூறிய கருத்துகளைத்தான் சொல்லி இருக்கிறார்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.மேலும் படிக்க...
நாகை மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிலம்புச்செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று குனா, செஞ்சிவேல்,மேலும் படிக்க...
இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! பிரேமலதா
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. வெற்றிக்மேலும் படிக்க...
த.வெ.க. மாநாட்டுக்கு 8 லட்சம் பேர் வருகை – 7 மணிக்குள் நிகழ்ச்சியை முடிக்க காவல்துறை அறிவுறுத்தல்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெற உள்ளது. பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம்மேலும் படிக்க...
ஆரம்பமானது விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. கட்சியின்மேலும் படிக்க...
2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் மூன்று இந்திய பள்ளிகள்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீகாரத்தை அறிவித்துள்ளது. உலக அளவில் சிறந்த பங்களிப்பு மற்றும்மேலும் படிக்க...
புதிய திட்டங்களும் நவீன தீர்வுகளும்தான் இன்று தேவை – ராகுல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒரு சலூன் கடையில் சவரம் செய்யும்போது கடைக்காரரான அஜித்துடன் உரையாடல் குறித்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விடியோவில் “நாள் முழுவதும் உழைத்தாலும், நாளின் இறுதியில் சேமிக்கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை’’ என்றுமேலும் படிக்க...
ஒரே நாளில் 191 கோடி பரிசுப் பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஒரே நாளில் 191 கோடி பரிசுப்பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ம் தேதியன்று பேரவைத் தேர்தல் நடக்கிறது. அங்கு 24 மணி நேரத்தில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது- சபாநாயகர்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:- கவர்னர் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்க முழு உரிமை உள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் குறையேதும்மேலும் படிக்க...
தமிழக வெற்றி கழகத்துக்கு அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநாட்டுமேலும் படிக்க...
முதல்வர், துணை முதல்வர் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு அனுமதி வேண்டும் – ஆளுநரிடம் பாஜக கோரிக்கை

தமிழக முதல்வர், துணை முதல்வர் இனவாத கருத்துகளை பரப்புவதால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆளுநரிடம் தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜகமேலும் படிக்க...
‘2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்’ – தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

“உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை. மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்,” என்று தவெகமேலும் படிக்க...
கோவையில் எம்.ஜி.ஆர். படத்துடன் ஒட்டப்பட்ட விஜய் மாநாடு சுவரொட்டிகள்

விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் (27-ந் தேதி) நடைபெறும் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். நடிகர் விஜய்க்கு கொங்கு மண்டலமான கோவையில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் விக்கிரவாண்டி மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏராளமானமேலும் படிக்க...
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி போதை தரும் மதுவை உற்பத்தி செய்வது, வணிகம் செய்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம்மேலும் படிக்க...
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: உமர் அப்துல்லாவிடம் உறுதி அளித்த அமித் ஷா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. அத்துடன் மாநில அந்தஸ்தை ரத்து செய்து மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீரையும், லடாக்கையும் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநில கட்சிகள் மீண்டும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- …
- 176
- மேலும் படிக்க
