இலங்கை
இந்திய- இலங்கை தலைவர்களுக்கு இடையில் பேச்சு வார்த்தைகள் ஆரம்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். இதன்போது இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போதுமேலும் படிக்க...
ஜனாதிபதி அலுலகத்தில் இந்தியப் பிரதமர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். இதன்போது இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியாவிற்குமேலும் படிக்க...
இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (05) முற்பகல்மேலும் படிக்க...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான அதிகாரபூர்வ வரவேற்பு விழா ஆரம்பம்

இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா தற்போது கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்கமேலும் படிக்க...
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தாய்லாந்து பயணம்

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெறும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்களுக்கான இராப்போசன விருந்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று கலந்து கொண்டிருந்தார். மேலும் படிக்க...
பரந்தனில் இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி – பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் நேற்றையதினம் குறித்த காணி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம்மேலும் படிக்க...
ஹிக்கடுவயில் தம்பதியர் மீது துப்பாக்கி பிரயோகம்
ஹிக்கடுவ, கருவலகந்த பகுதியில் நேற்று (03) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 51 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குமரகந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் திருமணமான தம்பதியினரை குறிவைத்துமேலும் படிக்க...
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Ofமேலும் படிக்க...
பொலிஸ் நிலையத்தில் இளைஞரின் மர்ம மரணம்; மனித உரிமைகள் குழு விசாரணைக்கு அழைப்பு!

கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் 26 வயது இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது. நாவலையில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நபர் ஒருவர் நுழைந்ததாக அளிக்கப்பட்டமேலும் படிக்க...
பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் மற்றொரு கைதியால் கொலை

பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கைதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசியமேலும் படிக்க...
நிராகரிக்கப்பட்ட 37 வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம் தொடர்பான பிரச்சினை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பானமேலும் படிக்க...
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு

2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 19.37 மில்லியன் கிலோகிராமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 2024 ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த முறை தேயிலை ஏற்றுமதி 0.61 மில்லியன் கிலோகிராமினால் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்க முயற்சி – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதற்கு ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறமேலும் படிக்க...
இந்தியாவுடன் அரசாங்கம் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம் ; சாகர காரியவசம்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியமற்றது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிரந்தளித்தால் தேவையில்லாத முரண்பாடுகள் தோற்றம் பெறும். இந்தியாவுடன் அரசாங்கம் செய்துக்கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம். என்று ஸ்ரீ லங்காமேலும் படிக்க...
வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் எட்டாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் பெறுவதற்கு ஆதரவுமேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்தி அடித்தளம் பலவீனம் அடைந்துவிட்டது – ஜே.வி.பி. தான் நாட்டை ஆட்சி செய்கிறது

தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்று செயல்படும் விதத்தில் அவர்களின் பிரபலமான அடித்தளம் கணிசமாக பலவீனமடைவதை காண்பதாக பேராசியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். இன்று தேசிய மக்கள் சக்தியின் வேகம் குறைக்கப்பட்டு, ஜே.வி.பி எழுச்சி பெற்றுள்ளதாகக் கூறும் அவர்,ஜே.வி.பி.யே தற்போதுமேலும் படிக்க...
உள்நாட்டில் இடம்பெற்ற போர் குறித்து உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு (மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது குறித்து உள்நாட்டில்மேலும் படிக்க...
இலங்கை கடற்பரப்பில் பயணித்த கப்பலில் சீன பிரஜைக்கு சுகயீனம் : வைத்திசாலையில் அனுமதித்த இலங்கை கடற்படை

இலங்கையின் தெற்கே காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் பயணித்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக்குழுவைச் சேர்ந்த சீன பிரஜையொருவர் மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் இலங்கை கடற்படையின் உதவியுடன் கரைக்குக் கொண்டுவந்துமேலும் படிக்க...
வீட்டின் மீது வீசப்பட்ட பெற்றோல் குண்டு – 6 வயது சிறுவன் பலி
களுத்துறை, ரஜவத்தை, கமகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது வீசப்பட்டதாகக் கூறப்படும் பெற்றோல் குண்டினால் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (30) இரவு ரஜவத்த – கமகொட வீதி பகுதியிலுள்ள வீடொன்றுக்கு உந்துருளியில் வந்த இருவர், பெற்றோல்மேலும் படிக்க...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஈதுல் ஃபித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனிதங்கள் நிறைந்த அருள் மிகு ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று, அல்-குர்ஆன் ஓதி, இரா வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு பயனுள்ள முறையில் நாட்களை கழித்த எமக்கு அல்லாஹு தஆலா இந்த ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் பாக்கியத்தை வழங்கியிருக்கிறான் எனமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- …
- 436
- மேலும் படிக்க
