இலங்கை
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து பிள்ளையானுக்கு முன்பே தெரியும் – பொது பாதுகாப்பு அமைச்சர்

“பிள்ளையான்” என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் காவலில் இருந்தபோது 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். உயித்த ஞயாறு தாக்குதல்கள் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்றுமேலும் படிக்க...
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து நாடாளுமன்றில் விவாதம்

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த யோசனையின் அடிப்படையில், முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை இது குறித்த விவாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்தவருக்கு அச்சுறுத்தல்

செம்மணி விடயம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அச்சுறுத்தல், குறித்த மயானத்தின் நிர்வாகசபை உறுப்பினரான திரு.கிருபாகரன் தெரிவித்துள்ளார். 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மர்மமேலும் படிக்க...
பிரபாகரனையே கண்டுபிடித்த நாட்டில், இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது ஏன்? – சாமர சம்பத்

பிரபாகரன் இருந்த இடத்தையே கண்டுபிடித்த இந்த நாட்டில், நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை. பொது மக்கள் பாதுகாப்பு டுபாயில் இருந்தே வழிநடத்தப்படுகிறது என புதிய ஜனநாயக முன்னணி மேலும் படிக்க...
செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வில் 04 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 50 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இன்று 13வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 4 என்புத் தொகுதிகள் அடையாளம்மேலும் படிக்க...
தமிழ் மக்கள் சுமக்கும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது! -கனடா பிரதமர் மார்க் கார்னி

”இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது” என கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா வாழ் தமிழர்களுக்கும் , கனடாவின் பொதுபாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கும்மேலும் படிக்க...
ஓமந்தை காணி விவகாரம்: அரசாங்கத்தின் அறிவிப்பு

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஓமந்தை பொலிஸார் அத்துமீறி சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி அப்பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்மேலும் படிக்க...
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத விகாரைக் கட்டிடத்துக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இப்போராட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாகமேலும் படிக்க...
பொலிசாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி சூடு

பொலிசாரின் சமிக்ஞையை மீறி மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் நேற்றிரவு சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி இவ்வாறு பயணித்த டிப்பர் மீதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவுமேலும் படிக்க...
மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பு ,கறுவப்பங்கேணியில் இன்று அதிகாலை 1.30மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புகையிரத கடவையிலிருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் உயிரிழந்தவர் 23 வயதான எஸ்.நிசாந்தன் எனமேலும் படிக்க...
புதிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மொஹமட் ஷெரிப் அப்துல் வஸீத் சற்று நேரத்திற்கு முன்பு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மொஹமட் சாலி நளீம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்துமேலும் படிக்க...
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்: அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்காலத்தில் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி

காலஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது அரசாங்கம் மற்றும் அரசாங்கத்திற்குள் இருந்து ஆராயப்பட வேண்டிய ஒரு சவால் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, எவ்வளவு கடினமானதாகமேலும் படிக்க...
IMF இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை

தற்காலிக, வெளிப்படைத்தன்மையற்ற வரி விலக்குகளை வழங்குவதை நிறுத்துமாறு, இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இணைய வழி செய்தியாளர் சந்திப்பொன்றில் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழு தலைவர், இவான் பாபஜோர்ஜியோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கை, அரசாங்கமேலும் படிக்க...
அமெரிக்க வரிவிலக்கு பட்டியலில் இலங்கை இல்லை – ரணில் இருந்திருந்தால் தீர்வு கண்டிருப்பார் ; சமன் ரத்னப்பிரிய
அமெரிக்க ஜனாதிபதியின் வரி அதிகரிப்பில் இருந்து நிவாரணம் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இருப்பதாக தெரியவில்லை. ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்திருந்தால் ஜனாதிபதி டிரம்புடன் நேரடியாக கலந்துரையாடி இதற்கு தீர்வு கண்டிருப்பார் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமேலும் படிக்க...
06 மாதங்களில் 1,351 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் நிகழ்ந்த வீதி விபத்துகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி, 1,274 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 1,351 பேர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 1,166 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன,மேலும் படிக்க...
மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காற்றாலை கோபுரம் அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- …
- 436
- மேலும் படிக்க


