இலங்கை
நான்காவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

தபால் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி இன்று (21) நான்காவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 19 கோரிக்கைகளை முன்வைத்து, நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் தொழிற்சங்கங்கள் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.மேலும் படிக்க...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – வெளியான முக்கிய அறிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று அது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவிற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணிமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து – உச்ச நீதிமன்றில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல்

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தின் விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என்று அறிவிக்க கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
10,000 இலங்கையர்களை பணியமர்த்த தாய்லாந்து தீர்மானம்

தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், முதல் தொகுதி விரைவில் இலங்கையிலிருந்து வெளியேற உள்ளதாகவும் தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர்மேலும் படிக்க...
யாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்றுமேலும் படிக்க...
வட்டுவாகல் பாலத்தை இருவழிப் பாதையுடன் நிர்மாணிப்பதற்கு திட்டம்

பரந்தன் – கரைச்சி, முல்லைத்தீவு வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு,மேலும் படிக்க...
CID யில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் போதுமேலும் படிக்க...
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் இடம்பெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவு மக்கள் இதில் கலந்துகொண்டனர். ஹட்டன் ஸ்ரீகிஷ்னபவான் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாநாடு காலை 9.30 தொடக்கம் மாலைமேலும் படிக்க...
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 06 ஆம் திகதி நுகேகொடவில் உள்ள அவரதுமேலும் படிக்க...
வெகு சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாகமேலும் படிக்க...
கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் மரணம்மேலும் படிக்க...
ஆட்சி கவிழ்ப்பு குறித்து போலி பரப்புரை – மக்கள் நம்பத் தயாரில்லை : அமைச்சர் சந்திரசேகர்

“இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்.” – என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கைமேலும் படிக்க...
புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல்கள் ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்கு விண்ணப்பிக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்காணல்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது. முதற்கட்ட நேர்காணல்களுக்கு 47 அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். இந்த ஆண்டுக்கானமேலும் படிக்க...
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக தெற்கில் இலஞ்ச ஊழல்மேலும் படிக்க...
யாழில். நண்பியின் நம்பிக்கை துரோகத்தால் உயிர்மாய்த்த பெண்

யாழ்ப்பாணத்தில் நண்பி செய்த நம்பிக்கை துரோகத்தால் குடும்ப பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிர்மாய்த்த பெண்ணின் நண்பி ஒருவர், கடந்த சிலமேலும் படிக்க...
பிரதமர் சீனாவுக்கு விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் எதிர்வரும் 29ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தியான்ஜினில் 31ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் பிரதமர், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்மேலும் படிக்க...
வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு சிவநகரில் உள்ள 12வது சிங்கமேலும் படிக்க...
ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காதிருக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,ஹர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கவில்லை என ஒன்றியத்தின் செயலாளர் தேவதாஸ் அனோஜன் தெரிவித்துள்ளார். தனி ஒரு அரசியல் கட்சியின் ஹர்த்தாலுக்குக்கான அழைப்பிற்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமா் ஆதரவு வழங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர்மேலும் படிக்க...
தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரி கந்தப்பளையில் போராட்டம்

அரசாங்கத்துக்கு எதிராக சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பினர் கந்தபளை நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டம் நேற்று மாலை 05 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பதாதைகள் மற்றும் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.மேலும் படிக்க...
வாடகை வீடு தேடும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜேராமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வரும் பின்னணியில் அவர் இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- …
- 436
- மேலும் படிக்க
