இலங்கை
ஜனாதிபதியை சந்திக்க விரும்பும் தமிழரசுக் கட்சி

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஒரு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தமிழரசுக் கட்சியால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதாக ஜனாதிபதிமேலும் படிக்க...
இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம்மேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் ஐ சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் நீதி கோரிய மகஜர் கையொப்பங்-களுடன் கையளிப்பு

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் நேற்றைய தினம் கொழும்பில் கையளிக்கப்பட்டன. நேற்று மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐநாமேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார். இந்த மீளாய்வுக்மேலும் படிக்க...
ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் இன்று உரையாற்றவுள்ளார். ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான திட்டங்களை மையமாகக் கொண்ட பிரான்ஸ் மற்றும்மேலும் படிக்க...
முன்னாள் குடிவரவு-குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு 2 ஆண்டுகள் சிறை

முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இலங்கையின் இ-விசா செயல்முறையை இடைநிறுத்துவது தொடர்பான இடைக்கால உத்தரவை மீறியதற்கான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த உத்தரவுமேலும் படிக்க...
இலங்கையில் இணையக் குற்றங்களில் எண்ணிக்கை அதிகரிப்பு – ஏழு மாதங்களில் 6,512 முறைப்பாடுகள்

இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சமூக ஊடகங்கள் தொடர்பான 6,512 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தங்காலை சம்பவம் – உயிரிழந்த நபரின் இரு மகன்கள் கைது

தங்காலை – சீனிமோதர பகுதியில் போதைப்பொருள் அடங்கிய மூன்று லொரிகளுடன் மீட்கப்பட்ட ஒருவரின் இரண்டு மகன்களும் இன்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தங்கல்லே பகுதியில் மூன்று லொரிகளில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 9,888 மில்லியன்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என நம்பப்படும் தங்கம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில் 6,000 தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதேமேலும் படிக்க...
மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரானமேலும் படிக்க...
தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கிய இலங்கை மின்சார சபை ஊழியர்கள்
இன்று நள்ளிரவு முதல் கொள்முதல் மற்றும் டெண்டர் செயல்முறைகளில் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முறைசாரா முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதன் ஊழியர்கள் கடந்த 17 நாட்களாகமேலும் படிக்க...
கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் காலமானார்

கரந்தெனிய பிரதேச சபைத் தவிசாளர் மஹீல் முனசிங்க திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். அவர் இன்று (21) காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர் சுகவீனமடைந்த நிலையில் கரந்தெனிய பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திமேலும் படிக்க...
அநுரவின் அரசு பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை : சந்திரிகா விசனம்

நல்லாட்சியை முன்னெடுப்பதை விடவும், பழிவாங்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விசனம் வெளியிட்டுள்ளார். கொழும்பில் பிரத்தியேகமாக இல்லமொன்றை பெற்றுள்ள நிலையில் அதன் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதேநேரம், எனக்குமேலும் படிக்க...
சுவிஸ்லாந்து கருத்தரங்கு – சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை வழங்கும் ஆணையை பெற்றுள்ளதாக ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பெருமையுடன் வலியுறுத்திக் கூறியுள்ளது. ஆனால் இக் கருத்தை மறுத்துரைத்த தமிழ்த் தேசியமேலும் படிக்க...
ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்க நோக்கி புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (24)மேலும் படிக்க...
செந்தில் தொண்டமானின் செயலுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதலமைச்சர்

நேபாளத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது, தன்னுயிரை பொருட்படுத்தாது, பலரின் உயிரை காப்பாற்றிய இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பாராட்டுக் தெரிவித்த கடிதத்தை, தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனில் இ.தொ.கா தலைவர்மேலும் படிக்க...
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்து லொறியுடன் மோதி விபத்து

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேரூந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த மேலும் படிக்க...
கெஹெல்பத்தர பத்மே குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்செயற்பாடுகளில் பிரதான குற்றவாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தரே பத்மே நீதிமன்றமேலும் படிக்க...
புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தின் 3 ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- …
- 436
- மேலும் படிக்க
