இலங்கை
கெஹல்பத்தர பத்மேவின் குடும்பத்தினர் மீது கொலை முயற்சி

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முன்னெடுக்கப்பட்ட முயற்சி பன்னல பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாகமேலும் படிக்க...
நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கலந்துரையாடப்படும் – ஜெனிவாவில் விஜித ஹேரத் தெரிவிப்பு

சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமைமேலும் படிக்க...
வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினை திறனாகப் பயன்படுத்த வேண்டும்

வரவு- செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வினைத்திறனாகவும் பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடையில் நேற்றைய தினம்மேலும் படிக்க...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் நாமல்

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் துறையிடம்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. இது உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்ளவதை குறிக்கிறது.மேலும் படிக்க...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகிய நாமல் ராஜபக்ஷ

வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம்மேலும் படிக்க...
ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள இலங்கை தமிழரசு கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் எவ்வாறு நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தைமேலும் படிக்க...
பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் விரைவில் வெளிக்கொணரப் படுவார்கள் – அரசாங்கம்

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து விரைவில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் குற்றச் செயல்கள் குறித்து காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதைக் குறிப்பிட்ட அமைச்சர் ஜயதிஸ்ஸ, இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமேலும் படிக்க...
பாதுகாப்பு செயலாளர் பதவியை கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் – சட்டத்தரணி மனோஜ் கமகே
நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும் என்று சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ச ஒரு திறமையான மற்றும்மேலும் படிக்க...
இந்து பக்தர்களால் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்று

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்று (26) ஆகும். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் இந்து பக்தர்களின் பண்டிகை மகா சிவராத்திரி நாளாகக் கருதப்படுகிறது. இந்து பக்தர்கள் உண்ணாவிரதம் இருந்தும், இரவில் தூக்கத்தைத் தவிர்த்தும்,மேலும் படிக்க...
காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் இளைஞன் – விசாரணைகள் ஆரம்பம்

நெல்லியடி – மந்துவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த குறித்த இளைஞர், தம்மைக் கைது செய்து அழைத்துச்மேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் அமைச்சர் விஜித ஹேரத்: முக்கியஸ்தர்கள் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்திற்கான நாடாளுமன்ற துணை செயலாளர் ஹைபரியின் லார்ட் காலின்ஸூடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு சந்திப்பை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டெர்க் (volker turk) மற்றும் பாலஸ்தீனமேலும் படிக்க...
பாதுகாப்பு நிலைமை குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. இதில் பாதுகாப்புமேலும் படிக்க...
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி என்பன இதன்போது எதிராக வாக்களித்தன. இதேவேளை,மேலும் படிக்க...
சிவனொளிபாத மலைப்பகுதியில் தீயினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசம்

சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ பரவலினால் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீயானது சிவனொளிபாத மலை தொடர் வரை பரவியிருந்தது. அதிக வெப்பகால நிலையினால்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பாதாள உலக அச்சுறுத்தல்… – புலனாய்வு அமைப்புகள் தகவல்

பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொது இடங்களில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரச புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஜனாதிபதிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. குறிப்பாக, நாட்டில் தற்போது நடைபெற்று வரும்மேலும் படிக்க...
ஐ.நா சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு – சஜித் இடையே கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி Marc Andre Franche மற்றும் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர்மேலும் படிக்க...
ஞானசார தேரருக்கு பிணை

சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (25) பிணையில் விடுவிக்கப்பட்டார். இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஜனவரி ஒன்பதாம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார தேரரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. கொழும்புமேலும் படிக்க...
வரவு செலவுத் திட்டம் யாரையும் கைவிடவில்லை – பிரதமர்

அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் யாரையும் கைவிடவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “புள்ளிவிவரங்களுக்கு அப்பால்மேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – செவ்வந்தியின் புதிய புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸார்

பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் பெண்ணின் புதிய படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் நீர்கொழும்பு கட்டுவெல்லகம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி எனமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- …
- 437
- மேலும் படிக்க
