இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை – இரு முக்கிய சந்தேக நபர்கள் கைது

சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரு முக்கிய சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். கடந்த வாரம் புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல வேடமிட்டு வருகை தந்த ஒருவரால் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்டார். கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்குத் திட்டமிட்டுக் கொடுத்தமைமேலும் படிக்க...
வடக்கில் இராணுவத்தினரால் இளைஞர்களுக்கு போதைப் பொருட்கள் வழங்கப் படுகின்றன – சிறிதரன்
இராணுவத்தில் நான்கில் மூன்று பங்கினர் வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் உணவகம் ஒன்றை நடத்துவதுடன் அங்கு இராணுவத்தினரால் இளைஞர்களுக்கு போதைப்பொருட்களும் வழங்கப்படுகின்றன . சில இளைஞர்கள் அந்த இராணுவ முகாமில் ஆடையின்றி உள்ளாடைகளுடன்மேலும் படிக்க...
பொலிஸ் சேவையில் தமிழ் மொழி பேசுபவர்களை இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை – பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

நாட்டின் பாதுகாப்புக்கும் பொது மக்களின் பொது மக்களின் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் திணைக்களத்தின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்துகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது. தமிழ் மொழி மூலமான உறுப்பினர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறதென தேசியமேலும் படிக்க...
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – ஜனாதிபதி

தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமையப் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
நாளை மறுதினம் இலங்கையில் நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்படவில்லை எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ஷஹ்பான் மாதத்தை நாளை பூர்த்தி செய்யுமாறும், நாளை மஹ்ரிபு தொழுகையுடன் புனித ரமழான்மேலும் படிக்க...
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்வதில்லை – எரிபொருள் விநியோகத்தர்கள்

எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள பெட்ரோலியப் பொருட்களை மட்டுமே விநியோகிப்பதாக அந்த சங்கம்மேலும் படிக்க...
இனவாதம் , தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப் படாது ஜனாதிபதி
இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்ட கட்டமைப்பின் ஊடாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்றுமேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் தொடர்பான மாஜிஸ்திரேட்டின் விசாரணையின் முடிவில் மாஜிஸ்திரேட் இந்தமேலும் படிக்க...
இலங்கையில் வறுமை 52 வீதத்தால் அதிகரிப்பு

கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வறுமை 45 – 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) புதிய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவாக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் தொடர்பு உண்டு- குற்றம் சுமத்தும் சுனில் வட்டகல

முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களை மேற்கொள்வதற்காக பாதாள உலகக் குழுக்களை பயன்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, உயர் நீதிமன்ற நீதிபதிமேலும் படிக்க...
புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இப்பிறை தொடர்பான விடயங்கள் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இம் மாநாட்டில்மேலும் படிக்க...
சாந்தன் உயிரிழந்து ஓராண்டு – எள்ளங்குளம் மயானத்தில் துயிலுமில்லம் திறப்பு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த சாந்தன் உயிரிழந்து இன்றுடன் ஓராண்டு கடந்தள்ள நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட மயானத்தில் அன்னாரின் துயிலுமில்லம் அவரது தயாரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்திய முன்னாள் பிரதமர்மேலும் படிக்க...
வெளிநாட்டுப் பயணங்களுக்காக அதிக செலவு செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார். இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இது நடந்தது. மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய பிரதமர், ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப்மேலும் படிக்க...
ஐநா மனித உரிமை பேரவை இலங்கை குறித்து ஒரு நிலைப்பாடு உக்ரைன் குறித்து வேறொரு நிலைப்பாடு – ரணில் சாடல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டையும் உக்ரைன் தொடர்பில் வேறு ஒரு நிலைப்பாட்டையும் பின்பற்றுவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் இது குறித்து தீவிர கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.மேலும் படிக்க...
நாடு முழுவதும் ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி உத்தரவு
நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைப்பதற்கான ஆணையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12, அத்தியாயம் 40 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த உத்தரவுமேலும் படிக்க...
அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக ப.சத்தியலிங்கம் நியமனம்
நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களை கையாள்வதற்கான குழு சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்தினவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார் சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய,மேலும் படிக்க...
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள்

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் நேற்று மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலைமேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டத்திற்கு தயாராகும் தாதியர்கள்

2025 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (27) நண்பகல் 12 மணிக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் முன்பாகவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அடிப்படை சம்பளத்தில் 1/160 வீதம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- …
- 437
- மேலும் படிக்க


