இலங்கை
தபால் மூல வாக்கு விண்ணப்பங்களுக்கான இறுதிநாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச்மேலும் படிக்க...
தையிட்டி விகாரை தொடர்பில் நியாயமான தீர்வு – அரசாங்கம் உறுதி

இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத்மேலும் படிக்க...
திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக ஹிருனிகா அறிவிப்பு

கணவர் ஹிரானுடனான திருமண பந்ததில் இருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார் நீண்ட யோசனைக்கு பிறகு ஹிரானும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்தோம், இந்த முடிவு பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் எடுக்கப்பட்டது.மேலும் படிக்க...
பயங்கரவாத அச்சுறுத்தல் – மிகக் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 100 ஆவது இடம்

உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதாக்கத் தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார விஞ்ஞானம் மற்றும்மேலும் படிக்க...
மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (11) அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்கான காரணத்தை ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி முன்னாள் ஜனாதிபதிமேலும் படிக்க...
உலக சந்தையில் இலங்கை தொழில் முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் -ஜனாதிபதி

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தூதுவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் வலுவான திட்டத்தைக் கொண்டுள்ளது எனவும்மேலும் படிக்க...
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று பேர் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் முறையாகப் பதவியேற்றனர். அதன்படி, மேல் நீதிமன்ற நீதிபதிகளான டபிள்யூ.கே.எஸ்.யு. பிரேமச்சந்திரா, கே. பிரியந்த பெர்னாண்டோ மற்றும் ஏ. பிரேமசங்கர் ஆகியோருக்குமேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்தி தேர்தல்களில் வழங்கிய வாக்குறுதிகள் முற்றிலும் பொய்யானது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் – உதய கம்மன்பில

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் முற்றிலும் பொய்யானது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும். முன்னாள்மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகமும் வன்னிபாராளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் தொடர்பாடல் காரியாலமும் வவுனியா குருமன்காடு காளிகோவில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை (09) திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எம்.எ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் புதிய அலுவலகத்தை நாடாவெட்டி திறந்துவைத்தனர். இதன்போதுமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி, 336 உள்ளூராட்சி சபைகளுக்கு மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்கமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி

”இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை தனித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும்” இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற இலங்கைமேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டாரா கைது

பிலியந்தலை கொல்லமுன்ன பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதன்படி, பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கைமேலும் படிக்க...
பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்?

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இன்று (09)மேலும் படிக்க...
இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில், வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு,மேலும் படிக்க...
நாடு முழுவதும் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்

நாடளாவிய ரீதியில் சுமார் 400 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் இந்த வருடத்திற்குள் பாதுகாப்பானதாக மாற்றப்படும் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (7) இடம்பெற்ற 2025 வரவு-செலவுத் திட்ட உரையின்மேலும் படிக்க...
காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு அமைச்சர்கள் குழாம் விஜயம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை (07) அமைச்சர் குழாம் நேரில் விஜயம் மேற்கொண்டு , தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,மேலும் படிக்க...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவையொட்டி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (06) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.மேலும் படிக்க...
14 இந்திய மீனவர்கள் கைது

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகக் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள்மேலும் படிக்க...
யுத்தத்தின் போது கைவிடப்பட்ட ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு -பிரதி அமைச்சர்

யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்று மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய தலைவர் ஒருவரின் வழிநடத்தலுடன் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதுடன் 150 பேருக்கு அதன் மூலம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- …
- 437
- மேலும் படிக்க
