Day: October 16, 2026
பிரகீத் எக்னெலிகொட வழக்கு மீண்டும் விசாரணைக்கு – சுரேஷ் சலே ஆஜர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, அரச உளவுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் 11.23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உத்தியோக பூர்வ நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்க (Col. WMAM Nissanka) அவர்களினால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்மேலும் படிக்க...
இலங்கையின் பொருளாதாரம் வலுவான பாதையில் – IMF உறுதி

சர்வதேச நாணய நிதியம் (IMF) எப்போதும் இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் கூடிய நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் திணைக்களத்தின் துணைப் பிரிவுத் தலைவர் சோனாலி ஜெயின் சந்திரா தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்றுமேலும் படிக்க...
சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை – நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு

‘சிரிலிய சவிய’ நிதியுடன் தொடர்புடைய கணக்கில் நிதியைக் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்திய மற்றும் நிதி முறைகேடுகள் செய்த குற்றச்சாட்டுகளின் பேரில், இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை,மேலும் படிக்க...
ஷிரந்தி ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பான மருத்துவக் குழுவின் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சம்பத் இந்திக குமார,மேலும் படிக்க...
யேமன் ஜனாதிபதி மாளிகை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்

யேமன் நாட்டின் தற்போதையை தலைநகரான ஏடனில் அமைந்துள்ள அல்-மாஷிக் ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர். ஹூதி அமைப்பினர் யேமன் அரசப் படைகளின்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் கார் திருட்டுகள் அதிகரிப்பு – கண்டு பிடிப்பதில் சிக்கல்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வாகனத் திருட்டுகள் சுமார் ஐம்பது சதவிகிதம் அளவுக்குக் கணிசமாக அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சமீபத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கார் திருட்டு விகிதம், பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, அண்மைக் காலங்களில் குறைந்திருந்த போதிலும்,மேலும் படிக்க...
கோவையில் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் இன்று திறப்பு

தமிழகத்தின் கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று(16) திறந்துவைக்கிறாா். கோவை காந்திபுரம் நஞ்சப்பா வீதியில் சுமாா் 7 ஏக்கா் பரப்பில் பொதுப் பணித்துறை சாா்பில் பெரியாா்மேலும் படிக்க...
சிறைச்சாலை உயரதிகாரிகள் மல்வத்து – அஸ்கிரிய பீட மகாநாயக்கர்-களுடன் சந்திப்பு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுவிக்கப்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் (செயல்பாடுகள் மற்றும் ஊடகம்) சேனக்க பள்ளேதென்ன உள்ளிட்ட சிறைச்சாலை திணைக்கள உயர் அதிகாரிகள் குழுவினர்மேலும் படிக்க...
நீதிமன்றம் உத்தரவு பிக்குமாரிடம் வாசித்து, கையளிக்கப்பட்டது

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கு நீதிமன்ற உத்தரவை வாசித்து காண்பித்து, பொலிஸார் கையளித்துள்ளனர். பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, பிக்குமார் சிலர் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் நேற்றிரவுமேலும் படிக்க...
யாழில் ரூ.190 மில்லியன் செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன் ரூபா செலவில் நிறுவுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16.10.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் நடைபெற்றது. இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றியபோதே ஆளுநர்மேலும் படிக்க...
யாழில் ரூ.15 மில்லியன் பணம் உட்பட ரூ.85 மில்லியன் சொத்துக்களுக்கு முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 85 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கு இலங்கை பொலிஸின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த சொத்துக்களில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 70 மில்லியன் ரூபாவிற்கும்மேலும் படிக்க...
மீண்டும் விளக்கமறியலில் நாமல் ராஜபக்ஷ

கிரிஷ் நிறுவனத்தின் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகமேலும் படிக்க...
ஜனாதிபதி செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவதற்குத் தடை!

உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர், கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருப்பதைத் தடுத்து, கோட்டை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது பொலிஸ்ஸார் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு மண்டலமாகமேலும் படிக்க...

