Day: April 10, 2026
புறக்கோட்டை பஸ் நிலையம் – சேதம் விளைவித்தால் கடுமையான தண்டனை

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இன்று (10) காலை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர்மேலும் படிக்க...
நிலக்கரி விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

நிலக்கரி பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். இதற்கமைய, நம்பிக்கையில்லாப் பிரேரணையைத்மேலும் படிக்க...
“திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின் தான் முதல்வராவார்” – பியூஷ் கோயல்

“திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வராவார்” என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், “எங்களைப் பொறுத்தவரை தேசம் முதலில், கட்சி இரண்டாவது,மேலும் படிக்க...
இலங்கையில் அதிகரித்து வரும் பிரிந்து வாழும் தம்பதிகள்: 2024 கணக்கெடுப்பில் தகவல்

இலங்கையில் சட்டப்பூர்வமாகப் பிரிந்தவர்கள் மற்றும் சட்டப்பூர்வமின்றிப் பிரிந்தவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் உள்ளதாக தெரியவந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2024 சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் திருமண நிலை குறித்த முக்கியத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கணக்கெடுப்பின்படி நாட்டில் 10,512,344மேலும் படிக்க...
இணையத்தில் கசிந்தது ‘ஜனநாயகன்’ – விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி; டிஜிபியிடம் புகார்

திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழு திரைப்படமும் நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானதால் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர்மேலும் படிக்க...
சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். தமது சொத்து விபரங்களை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்கனவேமேலும் படிக்க...
ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தை – இஸ்லாமாபாத்தை உற்றுநோக்கும் உலக நாடுகள்

மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ஹார்முஸ் நீரிணையை பகுதியளவு திறப்பதாக அறிவித்துள்ளது. எனினும், கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபு ஊடகங்களின்படி, ஹார்முஸ் நீரிணை வழியாக தினமும் 15 கப்பல்கள் மட்டுமே செல்லமேலும் படிக்க...
தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்க வைக்கலாமென எவரும் எண்ணலாகாது – அமைச்சர் சந்திரசேகர்

இனவெறியைத் தூண்டி விட்டு தமிழ் மக்களிடையே தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியுமென்று எவரும் நினைக்கக்கூடாது என்றும் அன்றிருந்த வடக்கு, கிழக்கு இன்றில்லை என்றும் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முப்படைச் சட்டங்களின் ஒழுங்குவிதிகள்மேலும் படிக்க...
வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்பால் – திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிசு உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட தாயொருவருக்கு சிகிச்சை வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதமே சிசுவின் மரணத்திற்கு காரணம் என வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது சிசுவின் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். கடந்தமேலும் படிக்க...
பொய்க் குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர்

பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...

