Day: April 6, 2026
இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி

இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானதை அடுத்து, கொழும்புமேலும் படிக்க...
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும், இந்திய திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார்.நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரை மாய்த்துக் கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்மேலும் படிக்க...
ஜனாதிபதிக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு புதியமேலும் படிக்க...
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ஈரான்

ஐந்து வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்புத் திட்டம் குறித்து அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஆலோசித்தன. இதன்போது, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும், தற்காலிக போர்நிறுத்தத்தின் கீழ் ஹோர்முஸ் நீரிணையை (Strait ofமேலும் படிக்க...
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) சுரேஷ் சலே தாம் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் காவல்துறை மா அதிபர்மேலும் படிக்க...
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொலீசாரால் கைது செய்யப்பட்டு, பொலீஸ்மேலும் படிக்க...
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உளவு அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக ஈரான் திங்களன்று (06) தெரிவித்தது. அதன்படி, இந்த தாக்குதலில் மேஜர் ஜெனரல் சையத் மஜித் காதிமி (Seyed Majid Khademi) வீரமரணம் அடைந்தார் என்று இஸ்லாமிய புரட்சிகரமேலும் படிக்க...
அபாய கட்டத்தில் ஈரான் போர் – உடனடிப் போர் நிறுத்தத்திற்கான திட்டம் கையளிப்பு

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இரு தரப்பினருக்கும் சிறப்பு அமைதித் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய ஸ்திரத்தன்மையை முதன்மைப்படுத்தி இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அமைதித்மேலும் படிக்க...
தமிழ்நாட்டின் உள்ளக அரசியலில், இலங்கை துணைத் தூதுவர் தலையீடு என தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு

தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன், புதுச்சேரியில் காங்கிரசிற்கும் தி.மு.கவிற்கும் எதிரான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டின் உள்ளக அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்வதாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அவரை குற்றம் சுமத்தியுள்ளது. இந்தமேலும் படிக்க...
அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் – அமெரிக்கா பேச்சு

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உலகமேலும் படிக்க...
எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்பு மனுவை இன்று (ஏப் 06) தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்.23-ம் தேதிமேலும் படிக்க...
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்

தெஹ்ரானிடம் அனுமதி பெற்ற பின்னர், கடந்த 24 மணி நேரத்தில் 15 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக ஈரானிய ஊடகங்கள் நேற்றைய (06) தினம் செய்தி வெளியிட்டன. தெஹ்ரான் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதைமேலும் படிக்க...
டிரம்ப் மனநிலை பிறழ்ந்தவர் – மூத்த அரசியல்வாதிகள் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, மூத்த அமெரிக்க அரசியல்வாதிகள் டிரம்பை மனநிலை பிறழ்ந்தவர் என்று விமர்சித்ததுள்ளார். அத்துடன், இருபத்தைந்தாவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். டிரம்ப் மனரீதியாக நிலையற்றவராகவும்மேலும் படிக்க...
விமான நிலையத்தில் 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச்மேலும் படிக்க...
எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு தேடி ரஷ்யா செல்லும் அமைச்சர் விஜித

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்குத் தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வது குறித்து மாஸ்கோவில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை அவர் முன்னெடுக்கவுள்ளார். கடந்தமேலும் படிக்க...
வியாழன் பேச்சுவார்த்தை; வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA

சுகாதார அமைச்சருடன் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடைபெற்று வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளது. மருத்துவர்களின் இடமாற்றங்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்குப் பிந்தைய நியமனங்கள் தொடர்பான கவலைகள் காரணமாகமேலும் படிக்க...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் நேற்று (05) நள்ளிரவு அமுலுக்கு வரும் கையில் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளன. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 12.5 கிலோ சிலிண்டரின் விலையினை 775 ரூபாவினால் உயர்த்தியுள்ளதுமேலும் படிக்க...


