Day: March 31, 2026
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்

ஆங்கிலக் கால்வாயில் சிறு படகுகள் கடந்து செல்வதைத் தடுக்க உதவும் வகையில், பிரான்சுடன் 650 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான புதிய ஒப்பந்தம் ஒன்றை உறுதி செய்வதற்கான இங்கிலாந்தின் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன. 2023 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட தற்போதைய 475 மில்லியன் பவுண்டுகள்மேலும் படிக்க...
பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாலந்தா மாவட்டத்தில் உள்ள பீகார் ஷெரீஃபிலிருந்துமேலும் படிக்க...
வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க விதிகளை திருத்த கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மாற்றம் செய்யக் கோரிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என மதுரை அமர்வு தெரிவித்தது. தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. இந்தத்மேலும் படிக்க...
யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் இன்று (31) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கோவிலுக்கு அருகில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுன்னாகம்மேலும் படிக்க...
எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

எரிசக்தி அமைச்சர் மீது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கோரும் வரை காத்திருக்காமல் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளர்கள்மேலும் படிக்க...
மாணவரைத் தாக்கிய மூன்று மாணவர்களும் பராமரிப்பு நிலையத்திற்கு

ஹட்டன் நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட மூன்று மாணவர்களையும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரை வேரலவத்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹட்டன் மாவட்டமேலும் படிக்க...
ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அவர் தெளிவானமேலும் படிக்க...
ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் இன்று நாட்டுக்கு விஜயம்

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) இன்று (31) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அவர் நாட்டிற்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சுமேலும் படிக்க...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட மார்ச் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், நிதி அமைச்சின் செயலாளரால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. டிமல் அரந்தர பதில் தலைவராகப்மேலும் படிக்க...
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின்மேலும் படிக்க...
