Day: February 16, 2026
பிரதமர் மோடி முதன்முறையாக இஸ்ரேலுக்கு உத்தியோக பூர்வ விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் முதன்முறையாக, எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்து இருதரப்புமேலும் படிக்க...
இங்கிலாந்து துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை

ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, நாளை (17) இலங்கைக்கு ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். தனது விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர்மேலும் படிக்க...
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வருகை

டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற இந்தியா-பாகிஸ்தான போட்டியைக் காண ஏராளமான தனியார் ஜெட் விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. சுமார் 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வந்துள்ளன. இந்த ஜெட் விமானங்களின் வருகையால் பண்டாரநாயக்க சர்வதேச விமானமேலும் படிக்க...
பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ; ஒபாமா பதிலடி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை இனவெறியைத் தூண்டும் வகையில் சித்தரித்த காணொளிவை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில்மேலும் படிக்க...
எல்லை தாண்டிய 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் என்.எம். பெரேரா நிலையத்திற்கு நேற்று (15)மேலும் படிக்க...
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல் நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்குமேலும் படிக்க...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொலை – 05 ஐரோப்பிய நாடுகள் ஆதாரங்களை வெளியிட்டன

ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு ‘தவளை விஷமே’ காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட 05 ஐரோப்பிய நாடுகள் அதிரடி ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றியமேலும் படிக்க...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு

2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சை எழுதவுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மட்டும் 26,299 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களுக்காகமேலும் படிக்க...
IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அவர் இன்று முதல் நாளைமறுதினம் வரை நாட்டில் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, அவர் அரசாங்க அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.மேலும் படிக்க...
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 மத்திய நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் பிப்ரவரி 26-ஆம்மேலும் படிக்க...
