Day: February 7, 2026
“எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்; சுதந்திரமாக தொழில் செய்ய விடுங்கள்!” – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிவாரணேமே தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். அந்த மக்களை சுதந்திரமாக அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழிவகுத்தாலே போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள “நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின்” எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்மேலும் படிக்க...
வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்களுக்கு பூட்டு

வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் நேற்று மூடப்பட்டன. குறித்த உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காகமேலும் படிக்க...
மீனவர்களின் சத்யாக்கிரகப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் ஆரம்பித்த சத்யாக்கிரகப் போராட்டம் இன்று (07) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தமேலும் படிக்க...
19வது பிறந்தநாள் வாழ்த்து – சத்தியராஜ் அபிவரதன் (07/02/2026)

தாயகத்தில் சங்குவேலி- சங்கரத்தையை பிறப்பிடமாகவும் பிரான்சில் Corbeil-Essonnes ஐ வதிவிடமாகவும் கொண்டிருக்கும் சத்தியராஜ் அபிவரதன் 04ம் திகதி பெப்ரவரி மாதம் புதன்கிழமை அன்று வந்த தனது பிறந்த நாளை 07ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகிறார். இன்றுமேலும் படிக்க...
சுற்றுலாப் பயணிகளின் வருகை 3 இலட்சத்தைக் கடந்தது

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி 04ஆம் திகதி வரையான காலப்பகுதியில்மேலும் படிக்க...
நேபாளத்தில் திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் மேற்கு பகுதியான சுதூர்பச்சிம் மாகாணத்தின் பைதடி மாவட்டத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக பைதடி நகரின் பாவ்னி கிராமத்திலிருந்து பாஜங் நகரின் சன்குடா கிராமத்தை நோக்கி பயணித்த பஸ்,மேலும் படிக்க...
ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஆண்ட்ரூவின் உதவியாளரிடம் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக மின்னஞ்சல்கள் தெரிவிப்பு

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம் தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில், லண்டனுக்கு வரும் ஒருமேலும் படிக்க...
எப்ஸ்டீன் விவகாரம் – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ

மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் உதவியாளரிடம், தனது அழகான நண்பர் ஒருவருடன் இரவு உணவு ஏற்பாடு செய்ய கோரியதாக புதிய மின்னஞ்சல்கள் தெரிவிக்கின்றன. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில், லண்டனுக்கு வரும்மேலும் படிக்க...
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிப்பு நடந்த இடத்திலிருந்து மொத்தம் 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் வியாழக்கிழமை (05) ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தினர். அனர்த்தத்தில்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலான விசாரணையின் போது மத்திய அரசின் சட்டத்தரணி மேலதிக அவகாசம் கோரியதை அடுத்து,மேலும் படிக்க...
டிட்வா புயலால் நூறிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்

டிட்வா புயல் காரணமாக 103 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். குறித்த சிறுவர்களை பராமரிப்பதற்கும் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும்மேலும் படிக்க...
கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த புதல்வியான சமித்ரி ரம்புக்வெல்லவை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (06) பிற்பகல் கொழும்பு பிரதம நீதவானின்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனிநபர் சட்டமூலம் ஜனநாயகத்துக்கு எதிரானது – சாணக்கியன்

இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் சட்டமூலம் ஒன்றை நேற்று (05) சாணக்கியனால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இந்தமேலும் படிக்க...
போராட்டங்கள் செய்தாலும் பயனில்லை – ஜனாதிபதி

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் கண்டி மாவட்ட வேலைத்திட்டத்தில்மேலும் படிக்க...
