Day: January 26, 2026
முதலாவது பிறந்த நாள் வாழ்த்து – திருக்குமரன் ஜெய்வீன் (26/01/2026)

பிரான்ஸ் Val d’Europe Montévrain இல் வசிக்கும் திருக்குமரன் & சரண்யா தம்பதிகளின் செல்வ புதல்வன் ஜெய்வீன் (Jeyveen) தனது முதலாவது பிறந்த நாளை 26ம் திகதி ஜனவரி மாதம் திங்கட்கிழமை இன்று கொண்டாடுகிறார். இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும்மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப் பட்டுள்ளார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. நாடுகடத்தப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள பாதாள உலகக்குழுவின் தலைவர்; கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்புள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில்மேலும் படிக்க...
சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு,மேலும் படிக்க...
போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மற்றுமொரு படகு சிக்கியது

தென்கடல் பகுதியில் 290 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டநெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு போதைப் பொருட்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு படகும், 05 சந்தேக நபர்களும் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்மேலும் படிக்க...
அமெரிக்காவுக்கு சேவை இரத்து! – எயார் பிரான்ஸ் அறிவிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து டுபாய் நகரத்துக்கான விமானங்களை இரத்துச் செய்துள்ளதாக எயார் பிரான்ஸ் அறிவித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவுக்குமான விமான சேவைகளை இரத்துச் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிலவும் அதிகப்படியான குளிர் காரணமாக விமான சேவைகள் இரத்துச்மேலும் படிக்க...
பௌத்த பிக்குகளுக்கு விசேட அடையாள அட்டை அறிமுகம்

பௌத்த பிக்குகளை உரிய முறையில் அடையாளம் காணும் வகையில், அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு அடையாள அட்டையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறான ஓர் அடையாள அட்டையை அறிமுகம் செய்வது குறித்து பௌத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத்மேலும் படிக்க...
சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார் – குடியரசு தின விழா

நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரைமேலும் படிக்க...
தெற்கு பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு

தெற்கு பிலிப்பைன்ஸில் பாசிலானில் 350 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எம்.வி. த்ரிஷா கெர்ஸ்டின் 3 (MV Trisha Kerstin 3) என்ற பயணிகள் கப்பல், ஜாம்போங்கா நகரத்திலிருந்து தெற்குமேலும் படிக்க...
Rebuilding Sri Lanka வேலைத் திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க அழைப்பு

‘டித்வா’ சூறாவளியால் வீடுகளை இழந்தவர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த விசேட அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக ஏராளமான மக்கள் தமது வீடுகளையும் சொத்துக்களையும்மேலும் படிக்க...
80 பயணிகளின் உயிரை பாதுகாத்த பேருந்து சாரதி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் கட்டுப்பாடு திடீரென செயலிழந்த நிலையில், சாரதி மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையினால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, தலவாக்கலையில்மேலும் படிக்க...
கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம் – கடற்தொழில் அமைச்சர்

தமிழர்களின் அடையாளங்களை அழித்து , அவர்களின் தனித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு சிங்கள குடியேற்றத்தையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள மாட்டாது என உறுதியளிக்கிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேமேலும் படிக்க...
யாழில் இந்திய குடியரசு தினம்

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து இந்தியமேலும் படிக்க...
யாழ். எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலைகள் கொள்ளை

யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட சிலைகளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளி ஐம்பொன்மேலும் படிக்க...

