Day: January 19, 2026
கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமைமேலும் படிக்க...
தந்தையின் கைகளிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தை, தந்தைக்குத் தூக்கம் ஏற்பட்டதால் அவரது கைகளிலிருந்து தவறி விழுந்து, தலை சீமெந்து தரையில் மோதியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று அளுபோமுல்ல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. படதொப துடுவ பிரதேசத்தை சேர்ந்த ருசேலி கெயாஷா என்ற இரண்டரைமேலும் படிக்க...
மேர்வின் சில்வாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டரீதியான வருமானத்தை விஞ்சி சொத்துக்களைக் குவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மேலும் படிக்க...
கொழும்பில் பணிப் பெண்ணை நிர்வாணமாக காணொளி பதிவு செய்த தொழிலதிபர் கைது

கொழும்பு – பொரள்ளையில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சமீப நாட்களில் இந்த காணொளி பரவியதைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம்மேலும் படிக்க...
புத்தர் சிலை விவகாரம்! தேரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேரர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும்மேலும் படிக்க...
“ஜல்லிக்கட்டை திமுக விழாவாக மாற்றிவிட்டனர்” – தமிழிசை கண்டனம்

ஜல்லிக்கட்டை திமுக விழாவாக மாற்றிவிட்டனர் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மக்கள் பிரதமரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுமேலும் படிக்க...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன – ஆளுநர் நா.வேதநாயகன்

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில்மேலும் படிக்க...
அதிபர்களின் இடமாற்றம் தொடர்பில் கலந்துரையாடல்

தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பான விடயங்கள் குறித்து பாராளுமன்ற உபகுழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட இந்த உபகுழு,மேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 2வது முறையாக வாக்குமூலம் வழங்குவதற்காக சிபிஐ அலுவலகத்தில் விஜய்

கரூர் நெரிசல் வழக்கில் இன்று (19) 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்றமேலும் படிக்க...
தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானதில் சுமார் 39 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 60 க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக வருவதாக ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட் தெரிவித்தார். கோர்டோபா நகருக்குமேலும் படிக்க...
சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

சிலியின் தெற்கில் உள்ள இரண்டு பிராந்தியங்களில் ஞாயிற்றுக்கிழமை (18) பேரழிவு நிலையை ஜனாதிபதி கேப்ரியல் போரிக் அறிவித்தார். குறைந்த பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் குறைந்தது 20,000 பேரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு அளிப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து நாடு திரும்பிய இலங்கை பழைய மாணவர்களுக்காக கடந்த வெள்ளிக்கிழமை (16) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் விசேட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினார். 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இளங்கலை முதல்மேலும் படிக்க...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று வழக்கு விசாரணைக்கு

திருக்கோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த மத குருக்கள் நால்வரும் ஏனைய பொதுமக்களும் இன்றைய வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர,மேலும் படிக்க...
மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்தமேலும் படிக்க...
நெல்லியடியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் நெல்லியடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் டெவோஸ் – குளோஸ்டர்ஸ் நகரில் இன்று (19) முதல் 23 ஆம்மேலும் படிக்க...
