Day: January 6, 2026
கரூர் சம்பவம்; நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகக் (TVK) கட்சியின் தலைவருமான விஜயை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு மத்திய புலனாய்வுத் துறை (CBI) அழைப்பாணை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூர்மேலும் படிக்க...
வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிப்பதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பு

வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்க இருப்பதாக வெளியான அறிவிப்புக்கு எதிராக ஐந்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் ஸ்பெயினும் எச்சரிக்கை விடுத்துள்ளன. வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் வெளியேற்றியதை நிராகரிப்பதாக லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், சிலி, கொலம்பியா, மெக்சிகோ, உருகுவேமேலும் படிக்க...
போலந்து விசா மோசடி: 4 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது

போலந்து நாட்டிற்குச் செல்வதற்காக போலி விசாக்களை வைத்திருந்த நான்கு இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (06) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தம்பதியினர்,மேலும் படிக்க...
சட்டவிரோத சொத்துக்களை கையகப்படுத்த அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி

2025 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டம் குறித்த விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (06) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. சட்டவிரோத சொத்துக்களைக் கையகப்படுத்தும் செயல்முறை குறித்து நாட்டின் பாதுகாப்பு மற்றும்மேலும் படிக்க...
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றுமேலும் படிக்க...
அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின், ஓஹியோ மாகாணம் சின்சினாட்டியில் உள்ள வீட்டில், மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக ஒருவரை கைதுசெய்துள்ள அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்சின், சின்சினாட்டியில் உள்ளமேலும் படிக்க...
மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. இதனிடையில் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணி இன்றுமேலும் படிக்க...
‘டித்வா’ புயல் : விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவ-த்தை கோரும் எதிர்க்கட்சி

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தம் இல்லாமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக எதிர்க்கட்சி முன்மொழிந்த விசேட தெரிவுக்குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க இன்று (06) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அத்துடன், விசேடமேலும் படிக்க...
கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா 2026: முதற்கட்ட ஏற்பாடுகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட முன்னாயத்தக் கூட்டம் இன்று (06) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நெடுந்தீவு பிரதேச செயலர்மேலும் படிக்க...
இவ்வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) ஆரம்பமாகியது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ஆரம்பமான இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளாவன, மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்றமேலும் படிக்க...
பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து விசிக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன்மேலும் படிக்க...
சோனியா காந்தி வைத்திய சாலையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் தனியார் வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இருமல் பிரச்சினைக்காகவும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்மேலும் படிக்க...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் கூடியுள்ளது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் எதிர்வரும்மேலும் படிக்க...
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு

வெனிசுலா தலைநகர் கராகஸில் ஒரு இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் திங்களன்று (05) மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் முதன்முதலாக முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 04 கிராம் 90 மில்லி கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண பொலிஸ்மேலும் படிக்க...
ஜப்பானில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

மேற்கு ஜப்பானில் உள்ள ஷிமானே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (06) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஷிமானே மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10:18மேலும் படிக்க...
நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இது நாளை (ஜனவரி 07) காலை 08.30 மணி வரை அமுலில் இருக்கும். கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனைமேலும் படிக்க...
வெனிசுலா ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

அமெரிக்கப் படைகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததைத் தொடர்ந்து, எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பதட்டங்கள் நிலவியதாக கராகஸ் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. வெனிசுலாவின் மிராஃப்ளோரஸ் ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச்மேலும் படிக்க...

