Day: December 28, 2025
அவசரகால சட்டம் மீண்டும் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நாட்டில் நிலவும் பொது பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அமலில் உள்ள பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நாட்டின் இயல்புமேலும் படிக்க...
விமான நிலைய போலி வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பில் தீவிர விசாரணை

தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (28) காலை வந்தடைந்த விமானமொன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அந்த விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 245 பயணிகளுடன் தோஹாவிலிருந்து காலை 8.27 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமேலும் படிக்க...
டித்வா பேரிடரால் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்- விஞ்ஞான சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு

டித்வா பேரிடரால் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞான சங்கத்தின் தலைவர் மைதிலி ரதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட டித்வா வெள்ளப் பேரிடரால் சுமார் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளதாக தலைவர் சமூக விஞ்ஞான பிரிவு யாழ்ப்பாண விஞ்ஞானமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவானால் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால்மேலும் படிக்க...
புதுச்சேரி வருகைதரும் குடியரசு துணைத் தலைவர்: மூன்றடுக்கு பாதுகாப்பு

புதுச்சேரியில் நாளை முக்கிய நிகழ்வுகளில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து நாளை காலை 5.30 மணிக்கு தனி விமானத்தில் குடியரசு துணைத் தலைவர் புறப்படுகிறார். காலை 10 மணிக்குமேலும் படிக்க...
இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகள் வரிசையில் மூன்றாமிடத்தில் இலங்கை

இந்திய பயணிகள் பண்டிகைக் காலங்களில் அதிகம் விரும்பும் சர்வதேச சுற்றுலாத் தலங்கள் குறித்த ஆய்வறிக்கையை MakeMyTrip இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த ஆய்வின்படி, இந்தியர்கள் அதிகம் முன்பதிவு செய்த நாடுகள் வரிசையில் இலங்கை மூன்றாமிடத்தில்மேலும் படிக்க...
முதல் 11 மாதங்களில் 4900 பில்லியனை கடந்த அரச வருமானம்

2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,613 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் ஊடாக 2,223 பில்லியன் ரூபாய் வருமானமும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின்மேலும் படிக்க...
யாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக இளைஞர்கள் , பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகமேலும் படிக்க...
டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை ஆரம்பம்

கைத்துப்பாக்கி தொலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்துமேலும் படிக்க...
கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பு – விரைவில் கைதிகள் விடுதலை

வருடாந்திர கிறிஸ்துமஸ் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை விரைவில் நடைபெறும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று கைதிகள் விடுதலை நடைபெறாத முதல் சந்தர்ப்பம் இந்த ஆண்டு ஆகும். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செய்தித்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் காலமானார்

பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் என்ற பெருமைக்குரிய மஞ்சுளா சூட் தமது 80ஆவது வயதில் நேற்று லெய்செஸ்டர் நகரில் காலமானார். லெய்செஸ்டர் நகரின் ஸ்டோனிகேட் வட்டார உறுப்பினராகவும், உதவி மேயராகவும் நீண்ட காலம் பணியாற்றிய அவர், அந்தச் சமூகத்திற்கு ஆற்றியமேலும் படிக்க...
மியன்மாரில் இராணுவ கவிழ்ப்புக்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல்

மியன்மாரில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகியின் (Aung San Suu Kyi )ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மியான்மார் இராணுவம் கவிழ்த்தது. அதன்பிறகு, நாடு இன்று, முதல் பொதுத் தேர்தலை நடத்துகிறது. 330மேலும் படிக்க...
பெருவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு

வடக்கு பெருவின் கடற்கரைக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக ஜெர்மன் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த நிலஅதிர்வு 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்தமேலும் படிக்க...
தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் – சீமான்

தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதன்போதுமேலும் படிக்க...


