Day: December 21, 2025
2025-ல் உலகின் தேடல் எது? கூகுள் வெளியிட்ட பட்டியல்

2025 ஆம் ஆண்டில் உலக மக்கள் எவற்றை அதிகம் தேடினார்கள் என்பதை வெளிப்படுத்தும் “Year in Search 2025” அறிக்கையை கூகுள் வெளியிட்டுள்ளது. அதன்படி செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கூகுளின் Gemini முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதேவேளையில், புதியமேலும் படிக்க...
ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்

ஜம்முவின் பிஷ்னா பகுதிக்கு அருகிலுள்ள ரிங் சாலையில் நேற்றிரவு சுற்றுலா பேருந்து ஒன்று தடுப்பு சுவருடன் மோதுண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தானது பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியதாக இந்திய ஊடகங்கள்மேலும் படிக்க...
யாழ். தையிட்டியில் கைதான வேலன் சுவாமிகள் உட்பட ஐவருக்கு பிணை

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்குமேலும் படிக்க...
தென்னாப்பிரிக்கா-வில் துப்பாக்கி பிரயோகம் – 09 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் (Johannesburg) நகருக்கு மேற்கே உள்ள பெக்கர்ஸ்டால் (Bekkersdal) நகரில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று உணவகமொன்றில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டுமேலும் படிக்க...
கம்போடியா உடனான எல்லை பிரச்சினை தீவிரம் – பாடசாலைகளை மூடிய தாய்லாந்து

கம்போடியா உடனான மோதல் காரணமாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை தாய்லாந்து அரசாங்கம் மூடியுள்ளது. இரு நாடுகளிடையே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட இரு நாடுகளிடையேயான மோதலில்மேலும் படிக்க...
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்

இந்த நாட்களில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் நேற்றும்மேலும் படிக்க...
மண்சரிவால் பாதிக்கப் படக்கூடிய பாடசாலைகள் இடமாற்றம் செய்யப்படும் – பிரதமர் அறிவிப்பு

அண்மைய பேரழிவால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து விவாதிக்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் யுனிசெஃப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, மாணவர்களைப் பாதுகாக்கவும், சேதமடைந்த பாடசாலை அமைப்பை மீட்டெடுக்கவும் அரசாங்கம்மேலும் படிக்க...
தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதன் மூலம் அல்ல, மாறாக எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு தளராது, உறுதியான உறுதியுடனும் ஒரே நோக்கத்துடனும் நம் அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு நாடாக நாம் முன்னேற முடியும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கமேலும் படிக்க...
தையிட்டியில் பதற்றம் – வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தையிட்டி ‘திஸ்ஸ’ விகாரைக்காகமேலும் படிக்க...
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்-கான சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை அதாவது சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீட்டித்துள்ளது. மக்களை வெளியேற அறிவுறுத்தும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேசமேலும் படிக்க...
பிரித்தானியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் காரணமாக தீ விபத்துகள் – பொலிஸார் எச்சரிக்கை

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின்சார மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகள் காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்து மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்மேலும் படிக்க...
T20 உலகக்கிண்ணத் தொடர் 2026: இந்தியக் குழாம் அறிவிப்பு

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் குழாம் இன்று (20) பிற்பகல் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவர் சுப்மன் கில் குழாத்தில் இருந்துமேலும் படிக்க...
பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கானமேலும் படிக்க...
பா.ஜ.க.வின் தமிழக மாநில தலைவருடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு தியாகராஜநகரில் அமைந்துள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்தமேலும் படிக்க...
சபரிமலை தங்கம் கொள்ளை – சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடு ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக எஸ்ஐடி விசாரணைமேலும் படிக்க...
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

டே்ஷகானா (Toshakhana) வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி (Bushra Bibi) ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இருவருக்கும் தலா ரூ.1.64 கோடிமேலும் படிக்க...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் – அதிக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்,?

பீஹாரை விட தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பல்வேறு மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் ஆணையகம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் சட்டசபை தேர்தல் முடிந்தமேலும் படிக்க...
இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்

டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் திகதி தாக்கிய சூறாவளியினால் 600க்கும் மேற்பட்டவர்கள்மேலும் படிக்க...
முன் மொழியப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலம் – பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள் தங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார் . வரைவு சட்டமூலம் மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு, தற்போது நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில்மேலும் படிக்க...

