Day: December 7, 2025
இலங்கை சிறையில் இருந்து விடுதலையாகி தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் 31 நாகை மீனவர்கள்

எல்லை தாண்டியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் நாகை மீனவர்கள் 31 பேர், தங்களை மீட்கக் கோரி சோகத்துடன் உறவினர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். நாகை நம்பியர் நகரைச் சேர்ந்தவர்மேலும் படிக்க...
டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் (draw) அமெரிக்காவின் வொஷிங்டனில் இன்று நடைபெற்ற போதே, இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. FIFAமேலும் படிக்க...
அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்காவின் ஜூனாவில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவிலும், கனடாவின் யூகோனின் வைட்ஹார்சுக்கு மேற்கே 250 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் படிக்க...
சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு

சூடானில் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ரேபிட் சப்போர்ட் போர்சஸ்(ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் நிலவுகிறது.மேலும் படிக்க...
இந்தியாவின் கோவாவில் பிரபல விடுதியொன்றில் தீப்பரவல் – 25 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கோவாவின் கடலோரப் பகுதியில் உள்ள பிரபலமான இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கோவாவின் அர்போராவில் உள்ள விடுதியில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன . இதேவேளை சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தவர்களில்மேலும் படிக்க...
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு A-35 வீதி

வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு யு-35 வீதியை புனரமைக்கும் பணிகள் இந்திய இராணுவ பொறியியல் குழுவினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் முல்லைத்தீவு யு-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள பாலம் சேதமடைந்தது இந்த நிலையில் குறித்தமேலும் படிக்க...
ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு

சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் நல்லதண்ணி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் பொலிஸார் வாகனங்களை நிறுத்துவதற்கு தடைவிதித்துள்ளனர் இதனால் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதில்மேலும் படிக்க...
அனர்த்தங்களால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு, 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட பத்து மடங்கு அதிகம்

Ditwah’ புயலால் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட பத்து மடங்கு அதிகம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் மூலம் ஏற்படும் மொத்தச் சேதம் $2.1 ட்ரில்லியனை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இறுதிச்மேலும் படிக்க...
தெஹிவளை துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

தெஹிவளை “A க்வாடஸ்” விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (6) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர் களுபோவிலமேலும் படிக்க...
ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைமேலும் படிக்க...
உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகளுக்கு இடமளிக்கப்படாது – வட மாகாணர் ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இடமளிக்கப்படாது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து அவர் நேற்று அறிக்கை வெளியிட்டார்.மேலும் படிக்க...
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்தங்களால் 190 பேர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டி மாவட்டத்திலேயேமேலும் படிக்க...
