Day: November 29, 2025
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களம் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதோ, இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையால் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்குவது குறித்துக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேடமேலும் படிக்க...
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்கள் அதிகரிக்கலாம் – வைத்தியர் சத்தியமூர்த்தி

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில், அண்மைய நாட்களில் பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தொற்றுநோய்கள் ஏற்படும்மேலும் படிக்க...
கொழும்பில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்த பிரதமர்

கொழும்பில் டிட்வா சூறாவளி கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதைத் தொடர்நது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (29) பிற்பகல் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துள்ளார். போமிரியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் நிலைமை குறித்தும் மதிப்பாய்வு செய்தார். இடம்பெயர்ந்த குடும்பங்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள போமிரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் , பிரதமர் பாதிக்கப்பட்டமேலும் படிக்க...
வானிலை சீற்றம் – கிட்டத்தட்ட 2 இலட்சம் மக்கள் இருளில்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் பரவலாக மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன்படி கிட்டத்தட்ட 200,000 வாடிக்கையாளர்கள் தற்போது மின்சாரம் இல்லாமல் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நோயல் பரியந்த தெரிவித்துள்ளார். இதற்கமைய மின்மேலும் படிக்க...
சென்னைக்கு தெற்கே டிட்வா புயல் – நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரிப்பு

வங்கக்கடலில் டிட்வா புயல் நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 350 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்தில் இருந்து 110மேலும் படிக்க...
சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது – வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்

சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது.இதன் விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழைமேலும் படிக்க...
பொது அவசரகால நிலை பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி எண். 2464/30 இல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, பொதுமேலும் படிக்க...
இந்திய மீட்புப் பணிக் குழுவினரும் நாட்டிற்கு வருகை

இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த குழுவில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குவதுடன் நான்கு மோப்ப நாய்களும் அழைத்து வரப்பட்டுள்ளன. நாட்டில்மேலும் படிக்க...
சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் 35 பேர்மேலும் படிக்க...
இலங்கையின் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா 02 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு

இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடினமான நாட்களை எதிர்கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கவலை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த நெருக்கடியின் போதுமேலும் படிக்க...
ஜனாதிபதி நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை அறிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்கும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்மேலும் படிக்க...




