Day: November 26, 2025
போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தம் – பொதுவான இணக்கம் எட்டப் பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பொதுவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை மொஸ்கோவில் சந்திக்க தனது சிறப்பு தூதுவருக்கு உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாகமேலும் படிக்க...
இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களால் காசாவில் போர் நிறுத்தம் ஸ்தம்பிதம்
காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நேற்றும் (25) ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு அங்கு இஸ்ரேலியப் படை கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துவரும் சூழலில் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இந்த போர் நிறுத்தம் பெரும்மேலும் படிக்க...
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் படிக்க...
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக கருத்துமேலும் படிக்க...
சீரற்ற காலநிலையால் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து பாதிப்பு – மக்களை அவதானமாக வீடுகளில் இருக்குமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களைமேலும் படிக்க...
இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன – அமைச்சர் இரா. சந்திரசேகர்

இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்றுமேலும் படிக்க...
தலைவர் பிறந்த நாள்! தமிழர் எழுச்சி நாள்! – சீமான்

இந்த உலகத்தின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனத்திற்கென தனித்துவமான வரலாற்றுப் பெருமிதங்கள் பல இருந்தாலும், இருப்பதிலேயே மாபெரும் பெருமை எம் தலைவர், என்னுயிர் அண்ணன், மேதகு வே பிரபாகரன் அவர்களை தன் மகனாக தமிழன்னை ஈன்றெடுத்தது தான். காலத்தின்மேலும் படிக்க...
ஜீவன் தொண்டமானும் மனைவி சீதை ஸ்ரீ நாச்சியாரும் இலங்கை வந்தடைந்தனர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் அவரது மனைவியான சீதை ஸ்ரீ நாச்சியார் இன்று புதன்கிழமை (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கடந்த 23 ஆம் திகதி திருப்பூரில்மேலும் படிக்க...
இலங்கையில் 19.4 சதவீத பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மன அழுத்தத்தின்மேலும் படிக்க...
தமிழ் இனத்தின் இறைவன் மேதகு!! சபையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவுபெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவேதான் அவரை தமிழ் மக்கள் இறைவனாகப் போற்றுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். அத்தோடுமேலும் படிக்க...

