Day: November 19, 2025
ஈழ மண்ணில் புத்தர் சிலை : தொல்.திருமாவளவன் கண்டனம்

ஈழ மண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்கள பௌத்த பிக்குகள் நிறுவிய அடாவடி ஆதிக்கப்போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என அந்த கட்சியின் நிறுவுனர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருகோணமலை புத்தர் சிலைமேலும் படிக்க...
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன்மேலும் படிக்க...
ஜனாதிபதியுடன் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், சிவநேசன், சி. சிறிதரன் மற்றும் அந்தக் கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்மேலும் படிக்க...
அவதூறுகளுக்கு உரிய பதில்களை நுகேகொட பேரணியில் வழங்குவோம் – குற்றாச்சாட்டை மறுத்த நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இன்று இதனைத் தெரிவித்தள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தமேலும் படிக்க...
அரச சேவைக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி

அரச சேவை, மாகாண அரச சேவை மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளுக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.மேலும் படிக்க...
“மன்னிப்புக் கோரி, இழப்பீடு வழங்குங்கள்”: ஜமால் கஸோக்கியின் மனைவி சவூதி இளவரசருக்குக் கோரிக்கை

2018 ஆம் ஆண்டு சவூதி முகவர்களால் தனது கணவரான ஊடகவியலாளர் ஜமால் கஸோக்கி படுகொலை செய்யப்பட்டமைக்காக மன்னிப்பையும் இழப்பீடையும் வழங்குமாறு, அவரது மனைவி ஹனான் எலாட்ர் கஸோக்கி, சவூதி இளவரசரிடம் கோரியுள்ளார். ஜமால் கஸோக்கியின் கொலையை சவுதி இளவரசர் மொஹமட் பின்மேலும் படிக்க...
பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது. இன் எல் ஹிலாவேயில் உள்ள மசூதிக்குமேலும் படிக்க...
சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர், எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சிஆர்பிஎப் வீரர்கள் துணையுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையானது, தங்க நகைமேலும் படிக்க...
தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்: நியூசிலாந்து பெண் வலியுறுத்தல்

தென்கிழக்கு ஆசியா முழுவதும் தனியாகப் பயணம் செய்துவரும் 24 வயதுடைய நியூசிலாந்து பெண் ஒருவர், இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆபாசமாகத் தன்னை வெளிப்படுத்தியதால் “அச்ச உணர்வுடன்” இருந்ததாகத் தெரிவித்துள்ளார். கிறிஸ்ட்சர்ச்சைச்மேலும் படிக்க...
2025 வெளியானதில் அதிக வசூலை குவித்த TOP 10 படங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் 10 ஆம் இடத்தில் உள்ளது. சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த மதராஸி திரைப்படம் 9 ஆம் இடத்தை பிடித்திருக்கிறது. பிரதீப் ரங்கநாதன்மேலும் படிக்க...
பிரான்ஸ் – டிஜிட்டல் Carte Vitale பயன்பாடு

நவம்பர் 18 முதல் டிஜிட்டல் Carte Vitale பயன்பாட்டை தற்போது பிரான்ஸ் முழுவதும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். முன்பு France Identité செயலி மற்றும் புதிய அடையாள அட்டை இருந்தால்தான் நிறுவ முடிந்தது; தற்போது Carte Vitale செயலியை பயன்படுத்தி செயல்படுத்தலாம்.மேலும் படிக்க...
திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் விடுத்த உத்தரவை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான தடையை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் மாதம் 16மேலும் படிக்க...
பாடல்பெற்ற சிவஸ்தலங்களில் புத்தர் சிலைகளை நிறுவுவதுதான் அரசின் இன, மத நல்லிணக்கமா? -சுரேஷ் பிரேமச்சந்திரன்

திருகோணமலையிலும் திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை பௌத்தமயமாக்கும் செயற்பாடுகளும் நாட்டின் வளர்ச்சிக்கும் இன ஐக்கியத்திற்கும் ஒருபோதும் பங்களிக்காது என்று தெரிவித்துள்ளமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன – ஜனாதிபதி அநுர குமார

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரும் அரசாங்கத்தின் முயற்சியை ஒருபோதும் தடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதுமேலும் படிக்க...
அந்தியேட்டி கிரியை ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் அன்னாரது 60வது பிறந்த நாளும் – அமரர். உருத்திரமூர்த்தி முருகையா ஜெயக்குமார் (19/11/2025)

தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Fontainebleau நகரை வதிவிடமாகவும் கொண்டு இருந்த அமரர் உருத்திரமூர்த்தி முருகையா ஜெயக்குமார் அவர்களின் அந்தியேட்டி கிரியையும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் 19ம் திகதி நவம்பர் மாதம் புதன் கிழமை அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கின்றார்கள். இன்று அமரர்மேலும் படிக்க...

