Day: November 11, 2025
ஃபுங் – வாங் புயல் எச்சரிக்கை; தைவானில் 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்

தைவான் நாட்டில், ஃபுங் – வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தெற்கு சீன கடல் பகுதியில், உருவான ஃபுங் – வாங் புயல், கடந்த 9ஆம் திகதி பிலிப்பின்ஸ் நாட்டில் கரையைக் கடந்தது.மேலும் படிக்க...
சதிகாரர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்: பிரதமர் மோடி உறுதி

டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இரண்டு நாள் அரசு பயணமாக பூட்டானுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. திம்புவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
கொரியாவில் இரு இலங்கை இளைஞர்கள் பலி – விசாரணைகள் தீவிரம்

தென் கொரியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது உயிரிழந்த இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. அந்த நாட்டின் ஊடக அறிக்கையின்படி, இருவரும் மீன் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின்மேலும் படிக்க...
கடவுச்சீட்டு மோசடி வழக்கு – வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பெக்கோ சமனின் மனைவி

பெக்கோ சமனனின் மனைவி ஷாதிகா லக்ஷனி கடவுச்சீட்டு மோசடி தொடர்பில் பலத்த பாதுகாப்புடன் வவுனியா நீதிமன்றில் நேற்று (10.11) ஆஜர்படுத்தப்பட்டார். பாதாள உலகக் குழுத் தலைவரான பெக்கோ சமன் மற்றும் அவரது மனைவி ஷாதிகா லக்ஷனி உள்ளிட்ட 6 பேர் அண்மையில்மேலும் படிக்க...
குடியேற்ற கொள்கையை கடுமையாக்கும் கனடா
கனடா அரசாங்கம் எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, 385,000 தற்காலிக குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட அதிக எண்ணிக்கையுடன்மேலும் படிக்க...
நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை – காரணம் கூறும் மகிந்த

இரு வேறு காரணங்களுக்கான எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலுமிருந்து தங்காலைக்கு தன்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாதுமேலும் படிக்க...
டெல்லி குண்டு வெடிப்பில் 13 பேர் பலி – கார் உரிமையாளர் கைது

புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்து ஏற்பட்ட “ஹுண்டாய் ஐ-20′ காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும்,மேலும் படிக்க...
பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சிக்கி 21 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று (11) இடம்பெற்றபோது அவரை அடையாளம் காணப்பட்டதையடுத்து எதிர்வரும் 24ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். செவ்வந்தி பாணியில் மட்டக்களப்பில் செயற்பட்டுவந்தமேலும் படிக்க...
21 பேரணியில் ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் தான் பங்கேற்கப் போவதில்லை – எஸ்.எம்.மரிக்கார்

நுகேகொடயில் எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில், ஜக்கிய மக்கள் சக்தியினர் கலந்து கொண்டாலும் அதில் தான் பங்கேற்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்த்தரப்பினர் அரசியல்மேலும் படிக்க...



