Day: October 17, 2025
சர்ச்சைக்குரிய சட்டங்கள் குறித்து ஜனாதிபதி அறிவிப்பு

பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தச் சட்டமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பொதுமக்கள் நிராகரிக்கும் சட்டங்களால் எந்தப் பயனும் இருக்காது என்றும் அவர் கூறினார். இன்று (17) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்மேலும் படிக்க...
இஷாரா செவ்வந்தி உட்பட 04 சந்தேகநபர்களுக்கு 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவல்

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட சந்தேகநபர்கள் நால்வரை 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவை பெற கொழும்பு குற்றப்பிரிவுமேலும் படிக்க...
தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளும் விசேட விடுமுறை

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தநாள் (21) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.கணேஸ்ராஜ் பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமையமேலும் படிக்க...
கடற்றொழில் அமைச்சில் உயர் மட்டக் கலந்துரையாடல்

கடற்றொழில் அமைச்சில் நேற்று ஒரு உயர் மட்ட விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், கடற்றொழில், பாதுகாப்பு அமைச்சுகள், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் திட்டம் உருவாக்கப்பட்டது.மேலும் படிக்க...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரிடம் 13ஆம் திருத்தம் பற்றிய சரியான கருத்தில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், பிறகு 13ஆம் திருத்தச் சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மைமேலும் படிக்க...
சம்பள நிர்ணய சபையை புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – செந்தில் தொண்டமான்

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துக்கொள்ளாதது பெரும் வேதனை அளிப்பதோடு, அது கண்டிக்கத்தக்க விடயம் எனவும்மேலும் படிக்க...
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு தப்பிச் சென்றதுடன், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகமேலும் படிக்க...
எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் அடைந்த குழுவின் கடைசி உறுப்பினர் காலமானார்

எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறிய முதல் பயணக் குழுவின் கடைசி உறுப்பினரான காஞ்சா ஷெர்பா, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 92 வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிவித்தனர். 1953 ஆம் ஆண்டு எட்மண்ட் ஹிலாரிமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்; 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில்மேலும் படிக்க...
கனடா, அமெரிக்கா விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை ஊடுருவிய ஹமாஸ் ஆதரவாளர்கள்

கனடா மற்றும் அமெரிக்கா விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை ஹேக் செய்த மர்ம நபர்கள், ஹமாஸூக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டதால் பரபரப்பு நிலவியது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த போர் , கடந்தமேலும் படிக்க...
இந்திய மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிரித்தானிய முன்னாள் பிரதமர்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரித்தானிய பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அண்மையில் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நிலையில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியுள்ளார். ரிஷிமேலும் படிக்க...
மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும்- அமைச்சர் சந்திரசேகர் வலியுறுத்தல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கும் நோக்கில், உயர் மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றுமேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஒக்டோபர் 17 அன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிடப்பட்ட விமான புறப்படும்மேலும் படிக்க...
யாழ். மந்திரி மனை புனரமைப்பு

வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான யாழ்.மந்திரிமனை நீண்ட கால பராமரிப்பற்ற நிலையில் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. அண்மையில் கூட இது பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது. யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 17ஆம் திகதி பெய்த மழை காரணமாக மந்திரி மனையின்மேலும் படிக்க...
25வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. ஜொபித்தா அன்ரன் (17/10/2025)

பிரான்ஸ் முலோன்(Moulon) நகரில் வசிக்கும் திரு திருமதி அன்ரன் ஜோசவ் மேரி ஜான்சி தம்பதிகளின் எங்கள் வீட்டு இளவரசி செல்வி.ஜொபித்தா அவர்கள் 17/10/2025 இன்று வெள்ளிக்கிழமை தனது 25 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார். இன்று தனது 25மேலும் படிக்க...