Day: October 5, 2025
பிரிட்டனின் புதிய பிரேரணையில் “இனமோதல்” எனும் பதம் சேர்ப்பு: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளைய தினம் நிறைவேறும்; வாக்கெடுப்பைக் கோராதிருக்க இலங்கை உத்தேசம்?

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்றசொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பிரேரணை நாளைய தினம் (6) ஐக்கியநாடுகள் மனித உரிமைகள்மேலும் படிக்க...
2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களை ஒதுக்கும் நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும்மேலும் படிக்க...
சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ள நிலையில் கடைமேலும் படிக்க...
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகமும் அரசுக்கு துணை போகிறது – அன்னராசா குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக கடற்றொழில் பீடமும், கடல் அட்டை பண்ணைகளுக்கு ஆதரவு வழங்குவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர்மேலும் படிக்க...
காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப் படுவார்கள்- இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை

காசாவில் எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த பேட்டியில் , “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவர் என்றும் காசா இராணுவமயமாக்கப்படாது” என்றும்மேலும் படிக்க...
இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்திலும், ராஜஸ்தானின் சிகாரி எனும் பகுதியிலும் கடந்த 15 நாட்களாக, 1மேலும் படிக்க...
இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவு – சீன, சிங்கப்பூர் ஜனாதிபதிகள் வாழ்த்து பரிமாற்றம்

இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோர் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். சீனாவும் சிங்கப்பூரும் நட்புறவு மிக்க அண்டை நாடுகள் மற்றும் முக்கியமான ஒத்துழைப்பு பங்காளி என்பதைக் குறிப்பிட்டமேலும் படிக்க...
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில், நாடு முழுவதும் தினமும் ஏராளமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நாடு முழுவதையும் உள்ளடக்கிமேலும் படிக்க...
தாஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பம் ; அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

போதைப்பொருள் கொள்கலன்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணையில் பொதுஜனபெரமுவின் முன்னாள் உறுப்பினரான சம்பத் மனம்பேரி விளக்கமறியல்ல வைக்கப்பட்டுள்ள நிலையில் றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைக்மேலும் படிக்க...
யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றுக்கு நேற்றிரவு இனந்தெரியாதோர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நேற்றிரவு குறித்த வீட்டிலுள்ளவர்கள் வீட்டின் வெளிக்கதவை மூடிவீட்டு வீட்டிற்குள் இருந்த வேளை இரவு 10.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் பெற்றோல் குண்டு வீசிமேலும் படிக்க...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்ட பேரணி

வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் இன்று (05) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்க பகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்ததுடன் அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோதினி அறிக்கையின் நிலுவைமேலும் படிக்க...