Day: September 24, 2025
பலஸ்தினத்தின் தனி நாட்டுக்கு உலகளாவிய ரீதியில் ஆதரவு

பலஸ்தீனத்திற்கு உலகளவில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 145 க்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான உறுதியை வெளிப்படுத்தியுள்ளன. பலஸ்தீன் தேசிய கவுன்சில் (PNC) 1988 ஆம் ஆண்டு தனிநாட்டு அறிவிப்பு வெளியிட்டபின் பல நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்தன.மேலும் படிக்க...
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸின் அட்டூ ழியத்துக்கான வெகுமதி : ஐ.நாவில் ட்ரம்ப்

” பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. தொடர்ந்து மோதலைத்மேலும் படிக்க...
பிரபல கிரிக்கெட் நடுவரான டிக்கி பேர்ட் காலமானார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நடுவர் குழாமின் ஜாம்பவானான டிக்கி பேர்ட் (Dickie Bird) தனது 92ஆவது வயதில் இன்று காலமானார். அவர் மரணமடைந்த செய்தியை இங்கிலாந்தின் கிரிக்கெட் கழகமான யோக்ஷியர் கழகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் களமேலும் படிக்க...
அதீத AI பயன்பாடு நேர்மையை குறைக்கின்றது! ஆய்வில் தகவல்

பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty) குறைக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 8,000 பேர் பங்கேற்ற ஆய்வில், தாங்களேமேலும் படிக்க...
மாணவர்களை நல்வழிப்படுத்த உடல் ரீதியான தண்டனை பொருத்தமில்லை! -சரோஜா போல்ராஜ்

பாடசாலையில் நடைமுறையிலுள்ள தண்டனையளிக்கும் முறையின் காரணமாக, நல்ல நிலைமைக்கு வந்த மாணவர்களை விட கல்வியை பாதியில் இடைநிறுத்தியவர்களே அதிகம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவு

கடந்த மாதம் 13ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுவிக்க யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் குறித்த மீனவர்கள் இன்றுமேலும் படிக்க...
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
ட்ரம்பை சந்தித்த ஜனாதிபதி அநுர குமார?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வின் போது இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.மேலும் படிக்க...
தங்காலையில் கண்டு பிடிக்கப்பட்ட போதைப்பொருள் – வெளியான அதிர்ச்சி தகவல்

ஹம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21ஆம் திகதியன்று இரண்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குடவெல்ல, மாவெல்ல ஆகிய கடற்கரைகளில் தரையிறக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். இதன் பின்னர் குறித்த போதைப்பொருள் அங்கிருந்து, கடற்கரைக்குமேலும் படிக்க...
டெல்லி ஆசிரம தலைவர் மீது பல மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு

டெல்லியின் ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஆசிரமத்தின் தலைவர் பல பெண் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்த சாரதி, பொருளாதாரமேலும் படிக்க...
கலைமாமணி விருது வழங்கும் நிகழ்வு- தமிழ் திரையுலகினரின் பெயர்களும் உள்ளடக்கம்

2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழ் திரையுலகின் பலருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருதுகள்மேலும் படிக்க...
காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை

காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது . பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. “காசாவில் போர், படுகொலை மற்றும் மரணத்தைமேலும் படிக்க...
ஈக்குவடோரில் சிறைச்சாலையில் கலவரம் – 14 பேர் பலி

ஈக்குவடோரில் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தல் 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஈகுவேடார் நாட்டில் குவயாகுவில் நகருக்கு தெற்கே துறைமுக நகரான மச்சலா என்ற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இதில் அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் திடீரென கலவரத்தில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க...
தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த சூறாவளி காரணமாக தாய்வானில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன்மேலும் படிக்க...
வெளிநாடு செல்ல தயாராகும் ரணில் விக்ரமசிங்க?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற நாடுகளில் ஒரு நாட்டிற்கு செல்ல தயாராகி வருவதாகமேலும் படிக்க...
ஜனாதிபதியை சந்திக்க விரும்பும் தமிழரசுக் கட்சி

தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஒரு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தமிழரசுக் கட்சியால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தமிழ் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதாக ஜனாதிபதிமேலும் படிக்க...
இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம்மேலும் படிக்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் ஐ சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.மேலும் படிக்க...
ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் நீதி கோரிய மகஜர் கையொப்பங்-களுடன் கையளிப்பு

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் நேற்றைய தினம் கொழும்பில் கையளிக்கப்பட்டன. நேற்று மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐநாமேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார். இந்த மீளாய்வுக்மேலும் படிக்க...