Day: September 20, 2025
கெஹெல்பத்தர பத்மே குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்செயற்பாடுகளில் பிரதான குற்றவாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தரே பத்மே நீதிமன்றமேலும் படிக்க...
புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

புறக்கோட்டை முதலாம் ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தின் 3 ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில்மேலும் படிக்க...
10ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஜேர்மன் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஜேர்மனியில் வாழும் அகதிகள் எண்ணிக்கை சுமார் 50,000 குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டின் இறுதியில் ஜேர்மனியில் வாழும் அகதிகள் எண்ணிக்கைமேலும் படிக்க...
பலஸ்தீனக் கொடியை உடையாக அணிந்த நெதர்லாந்து எம்.பி

காசாவில் நடந்த இனப்படுகொலையை தனது நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்தர் ஓவர்ஹான்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் பலஸ்தீனக் கொடியை அணிந்து வந்துள்ளார். பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், காசா பகுதியில் நடந்துவரும் இனப்படுகொலையை ஒப்புக்கொள்ளமேலும் படிக்க...
மலேசியாவில் புதிய வகை கொவிட்-19 வைரஸ்

மலேசியாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 43,087 நோயாளிகளில் கிட்டத்தட்ட 8.2 வீதமானோர் எக்ஸ்எஃப்ஜி (XFG) என்ற புதிய வகை கொவிட்-19 வைரஸால்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் மேலும் படிக்க...
மட்டக்களப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை காலமானார்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, நேற்று (19) தனது 86 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த இவர், ஓய்வுநிலை அரச உத்தியோகத்தராவார். இவர் 2004ஆம் ஆண்டுமேலும் படிக்க...
ஊழல் அரசியல் வாதிகளுக்கு மன்னிப்பு கிடையாது: அமைச்சர் ராமலிங்கம்

இலஞ்சம், மோசடி மற்றும் பொது சொத்துக்களை சூறையாடிய அரசியல்வாதிகளுக்கு மன்னிப்பு கிடைக்காது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவர்கள் ஒருபோதும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் கூறினார். யாழ்.மேலும் படிக்க...
இலங்கையில் பல கட்சி ஆட்சி முறையை ஒழிக்க முயற்சி – ரணில்

இலங்கை என்பது நீண்டகாலமாக ஜனநாயகத்தின் வழியில் பயணிக்கும் நாடு. செல்வந்த வர்க்கம் மாத்திரமல்ல சாதாரண மக்களும் ஜனாதிபதியாக முடியும். அப்படிதான் ரணசிங்க பிரேமதாச, மைத்திபால சிறிசேன மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதிகளாக தெரிவாகினர் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும்மேலும் படிக்க...
இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) நடைபெறுகிறது. கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இவ்விழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒன்றாக நிற்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அனைத்து சக்திகளையும் ஒன்றிணைப்போம்” என்ற கருப்பொருளின் கீழ்மேலும் படிக்க...
இலங்கையில் முதலீடு செய்ய இந்தோனேசியா ஆர்வம்

இலங்கையில் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தோனேசியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து வலுவான செயல் திட்டங்களை முன்னெடுத்து, எதிர்காலத்தில் சிறந்த முதலீட்டு பங்குதாரராக விளங்கும் விருப்பத்தையும் இந்தோனேசியா தெரிவித்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பானமேலும் படிக்க...