Day: September 14, 2025
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ வட கொரியாவில் மரண தண்டனை – ஐ.நா அறிக்கை

சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வட கொரியாவில் அன்றாட வாழக்கை மிகவும் கடுமையான விதிமுறைகளில் ஆனது. மக்கள் எப்படி முடி வெட்ட வேண்டும் என்பது முதல் தொலைக்காட்சியில் எதை பார்க்க வேண்டும் என்பது வரை அரசு தான் தீர்மானிக்கிறது. இதன் உச்சமாக தென்மேலும் படிக்க...
60 ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்படும் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்

பல தசாப்தங்களுக்குப் பிறகு, கொழும்பில் உள்ள புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தை புதுப்பிக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. புதுப்பித்தலுக்கான செலவு 424 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. புறக்கோட்டைக்குமேலும் படிக்க...
மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி

மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர்மேலும் படிக்க...
ஸ்பெயின் மதுபான விடுதியில் வெடி விபத்து; 25 பேர் காயம்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் சனிக்கிழமை (13) ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேர் படுகாயமடைந்தனர் என்று ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர். மாட்ரிட்டின் தென்-மத்திய மாவட்டமான வல்லேகாஸில் சனிக்கிழமை பிற்பகல் 3மேலும் படிக்க...
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்

மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார்மேலும் படிக்க...
டெல்லியில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு; 32 வயதுடையவர் கைது

டெல்லி, ரோஹினி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பேச்சு பயிற்சி சிகிச்சை நிலையத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (14) தெரிவித்தனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, செப்டம்பர்மேலும் படிக்க...
தமிழரசு கட்சி வாக்களிக்காதது தவறான முடிவு – சாணக்கியன்

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்கும் சட்டமூலத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரே வாக்களிக்கத் தேவையில்லை என தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (13) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதுமேலும் படிக்க...
நீதி, சமத்துவத்துவத்தை கட்டியெழுப்ப அனைத்து மதங்களுக்கு இடையேயான ஒற்றுமை அவசியம் – பிரதமர்

நாட்டில் நல்லிணக்கத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டுவதற்கு, சகல மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும், அன்பையும் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தறை எமது அன்னை ஆலயத்தின் 118-வது வருடாந்த பெருவிழாவில்மேலும் படிக்க...
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் – பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தல்

நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெஃப்ரல் அமைப்பு (PAFFREL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெஃப்ரல்மேலும் படிக்க...
இரண்டு வாரங்களுக்குள் ஜெனிவாவில் இலங்கை தொடர்பான முக்கிய வரைவுத் தீர்மானம்?

இலங்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் வரைவுத் தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானம், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஜெனீவாவில் உள்ளமேலும் படிக்க...