Day: September 6, 2025
காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை

காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். குறிப்பாக காசா நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை தெற்குமேலும் படிக்க...
மக்கள் உயிர் வாழ்வதற்கான உரிமையை உறுதிப் படுத்துங்கள் ; எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்
நாட்டில் தற்போது தினந்தோரும் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்க்கை பாதுகாப்பற்றாக மாறியுள்ளது. அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனமேலும் படிக்க...
த.வெ.க. தலைவர் விஜயின் திருச்சி பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தின் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட 04 இடங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போது விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தொண்டர்களிடையே உரையாற்ற உள்ள நிகழ்வைமேலும் படிக்க...
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி போராட்டம் ஆரம்பம்

சட்டவிரோத யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரிய சிறு போராட்டம் இன்று 6ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் ஆரம்பமானது. சனிக்கிழமை (6) பிற்பகல் ஆரம்பமான குறித்த சிறு போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (7) தினமும் நடைபெற உள்ளது. இன்றைய போராட்டத்தில்மேலும் படிக்க...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப்மேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவி இரத்து

போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்ட கடிதத்தில், இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சம்பத் மனம்பேரி மீதானமேலும் படிக்க...
ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில்மேலும் படிக்க...
இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது
இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள உலகக் குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு

தாய்லாந்தின் அடுத்த பிரதமராக Bhumjaithai கட்சியின் 58 வயது தலைவரான அனுடின் சார்ன்விரகுலை (Anutin Charnvirakul) அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது. தாய்லாந்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் வம்சத்தைச் சேர்ந்த பேடோங்டர்ன் ஷினாவத்ரா, கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையைக் கையாண்டதில் நெறிமுறை மீறல்களுக்காக கடந்தமேலும் படிக்க...
பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா

பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் படிக்க...
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு?
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாகவும் அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்வதக்கவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நியுயோர்க்கில்மேலும் படிக்க...
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு ; இதுவரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வதுமேலும் படிக்க...
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழ்நாட்டில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் காலவகாசம் விதித்துள்ள நிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.மேலும் படிக்க...
திருகோணமலை சுற்றுலா விடுதியில் தீ விபத்து

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து வெள்ளிக்கிழமை (05) இரவு 07.45 மணியளவில் ஏற்பட்டுள்ளது. மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்வி?

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சிடம் சிவில் செயற்பாட்டாளரான சிரந்த அமெரிக்க தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாக போலித் தகவல்களை பரப்பி கனடாவில் பல்வேறு தரப்பினர்மேலும் படிக்க...
எல்ல-வெல்லவாய விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களின் இறுதி அஞ்சலி

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று முன்தினம் (04) ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இதுவரை 10 பேரின் உடல்கள் நகர சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார் இதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய,மேலும் படிக்க...
12 மணி நேரத்தில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மஹாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றிரவு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேவேளை,மேலும் படிக்க...
