Day: August 27, 2025
ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (27) அறிவித்துள்ளார். அதேநேரம், உலகெங்கிலும் உள்ள ஏனைய லீக் போட்டிகளில் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அஸ்வின் தற்போதுமேலும் படிக்க...
மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிளார்க் தனது உடல்நிலை குறித்த தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அதேநேரத்தில், ஏனையவர்களும் தொடர்ந்து தங்கள் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுமேலும் படிக்க...
இந்த வருடத்தில் வாகன விபத்துக்களால் 1,778 பேர் பலி

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை,மரணங்களை ஏற்படுத்திய 1,682 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யூ.வுட்லர் தெரிவித்தார். இந்த விபத்துக்களில் 1,778 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், 3,428 பாரியளவான வாகனமேலும் படிக்க...
கனடாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

கனடா அரசு, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுளை விதித்து வந்தது. இதன் விளைவாக, 2024ஆம் ஆண்டில் கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 35% குறைந்தது. மேலும், 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 10% மேலும் குறைக்கப்படும்மேலும் படிக்க...
யாழ். விஜயத்தில் ஜனாதிபதி செம்மணியை பார்வையிடலாம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் செப்டெம்பர்மேலும் படிக்க...
Seine நதியில் நீச்சல்.. காலம் நீடிப்பு

சென் நதியில் நீந்துவதற்குரிய தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. அதன் காலப்பகுதியை நீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் திகதி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த Grenelle தடாகம், செம்ப்டம்பர் 14 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும், செப்டம்பர் 7 ஆம்மேலும் படிக்க...
“பார்டெல்லாவுடன் பிரான்ஸ்” என்ற முகநூல் குழுவில் இனவெறி கருத்துக்கள்: விசாரணைகள் ஆரம்பம்

ஜோர்டன் பார்டெல்லாவுடன் (Jordan Bardella) இருக்கும் பிரான்ஸ் என்ற பேஸ்புக் குழுவில் இனவாதக் கருத்துகள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கருத்துகளை எழுதிய நபர்களை அடையாளம் காண தேசிய ஆன்லைன் வெறுப்பை எதிர்க்கும் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குழுவில் வலதுசாரியானமேலும் படிக்க...
ரணிலின் கைதுக்கு இராஜதந்திரிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை – அரசாங்கம் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது இராஜதந்திர அமைப்போ எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் ஹேரத்மேலும் படிக்க...
அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை

பிரித்தானிய அரசு அகதிகளின் வருகை மற்றும் குடியேற்றம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு 1,11,084 பேர் பிரித்தானியாவில் அகதிகளாக பதிவு செய்யப்பட்டனர். இவ்வாறு பிரித்தானியாவுக்கு வருகை தரும் அகதிகளில் பெரும்பாலும்மேலும் படிக்க...
தென்கொரிய பாடசாலை வகுப்புகளில் மொபைல் பாவனைக்கு தடை

பாடசாலை வகுப்பு நேரங்களில் மொபைல் போன்கள், ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை தென்கொரயா நிறைவேற்றியுள்ளது. சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே மொபைல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் அண்மைய நாடாக இதன் மூலம் தென்கொரியா மாறியுள்ளது. அடுத்த கல்வியாண்டு 2026 மார்ச்மேலும் படிக்க...
சுற்றுச்சூழலைக் காக்க 1 பில்லியன் மரங்களை நட டென்மார்க் அரசு தீர்மானம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் டென்மார்க் அரசு புதிய பசுமை திட்டத்தை அறிவித்துள்ளது. 626 மில்லியன் யூரோ செலவில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் மொத்த விவசாய நிலப்பரப்பில் 10% பகுதி காடுகளாக மாற்றப்படவுள்ளது. இதன் மூலம் 1 பில்லியன் மரங்கள்மேலும் படிக்க...
மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த ராகுல்காந்தி

பீகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்காளர் உரிமை யாத்திரையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) பங்கேற்றார். பீகாரில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திடீரென வாக்காளர்மேலும் படிக்க...
வைத்தியர் ருக்ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இதுமேலும் படிக்க...
மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க் கட்சிகள்

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், இன்று மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றுகூடி கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின்போது எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தின் அடிப்படையில் இன்றைய கூட்டம்மேலும் படிக்க...
முன்னாள் அரசியல் கைதிக்கு பிணை வழக்கப்பட்டும் தொடர்ந்து சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த யூலை மாதம் (07) பிணை வழக்கப்பட்டும் தற்போதுமேலும் படிக்க...
ஈரான் அடிபணியாது – அமெரிக்காவுக்கு உச்சத் தலைவர் காமேனி பதிலடி

அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைமேலும் படிக்க...
ராஜஸ்தானில் அரச தேர்வில் மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை

ராஜஸ்தானில் அரச வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம் (RPSC) அண்மையில் நடத்திய விசாரணையில், போலி ஊனமுற்ற சான்றிதழ்கள், போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை பயன்படுத்தி தேர்வில்மேலும் படிக்க...
விஜயின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஓ.பன்னீர்செல்வம்

அண்மையில் மதுரையில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசிய ஒரு சில கருத்துகள் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சேலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் கோர விபத்து

கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து தம்புள்ளை திசை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்களும், தம்புள்ளையிலிருந்து கொழும்புமேலும் படிக்க...