Day: August 19, 2025
10,000 இலங்கையர்களை பணியமர்த்த தாய்லாந்து தீர்மானம்

தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், முதல் தொகுதி விரைவில் இலங்கையிலிருந்து வெளியேற உள்ளதாகவும் தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர்மேலும் படிக்க...
கொங்கோ கிராமம் ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 52 பேர் பலி

கொங்கோவின் கிராமம் ஒன்றுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடான கொங்கோவில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. உகாண்டாவை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த குழுவினர், எல்லையோர கிராமங்களில்மேலும் படிக்க...
யாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான முறையில் உரை பை ஒன்றுமேலும் படிக்க...
வட்டுவாகல் பாலத்தை இருவழிப் பாதையுடன் நிர்மாணிப்பதற்கு திட்டம்

பரந்தன் – கரைச்சி, முல்லைத்தீவு வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு,மேலும் படிக்க...
CID யில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் போதுமேலும் படிக்க...
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு கடந்த 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நகரில் இடம்பெற்றது. கொட்டும் மழைக்கு மத்தியிலும் பெருமளவு மக்கள் இதில் கலந்துகொண்டனர். ஹட்டன் ஸ்ரீகிஷ்னபவான் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற மாநாடு காலை 9.30 தொடக்கம் மாலைமேலும் படிக்க...
முதலாவது பிறந்த நாள் வாழ்த்து – சுதாகரன் ஆதீசன் (19/08/2025)

ஒல்லாந்தில் வசிக்கும் சுதாகரன்-நந்தினி தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆதீசன் தனது முதலாவது பிறந்த நாளை இன்று 19ம் திகதி ஆவணி மாதம் செவ்வாய்க்கிழமை தாயகத்தில் அப்பம்மா, அம்மம்மா, மற்றும் தாத்தாவுடன் இணைந்து மிகவும் விமர்சையாக கொண்டாடி மகிழ்கின்றார். இன்று முதலாவது பிறந்த நாளைமேலும் படிக்க...
‘இந்தியா’ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடவுள்ளார். பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21ஆம் திகதி ராஜினாமா செய்தார். இதனையடுத்துமேலும் படிக்க...
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கடந்த 06 ஆம் திகதி நுகேகொடவில் உள்ள அவரதுமேலும் படிக்க...
வெகு சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மாம்பழ திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளிவீதியுலா வந்து சிறப்பாகமேலும் படிக்க...
ரயில் மறியல் போராட்டம் ! 800க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று மாலை சுமார் 4 மணியளவில் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை தங்கச்சிமடத்தில் மீனவர்கள்மேலும் படிக்க...
மியன்மார் பொதுத் தேர்தல் டிசம்பர் ஆரம்பம்

மியன்மார் தனது பொதுத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி தொடங்கும் என்று அதன் இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசு தொலைக்காட்சி திங்களன்று (18) வெளியிட்ட செய்தியில், தேர்தல் மூன்று தனித்தனி நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமேலும் படிக்க...
கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் மரணம்மேலும் படிக்க...
ஆட்சி கவிழ்ப்பு குறித்து போலி பரப்புரை – மக்கள் நம்பத் தயாரில்லை : அமைச்சர் சந்திரசேகர்

“இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்.” – என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கைமேலும் படிக்க...
புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல்கள் ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்கு விண்ணப்பிக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்காணல்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது. முதற்கட்ட நேர்காணல்களுக்கு 47 அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். இந்த ஆண்டுக்கானமேலும் படிக்க...
தெற்கை போன்று ஏன் வடக்கில் நிதி மோசடிகளை விசாரணை செய்வதில்லை? இராமநாதன் அர்ச்சுனா கேள்வி

வடக்கில் இடம்பெற்றுள்ள நிதி மோசடி தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று சபையில் குற்றம் சுமத்தியிருந்ததுடன் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக தெற்கில் இலஞ்ச ஊழல்மேலும் படிக்க...