Day: July 31, 2025
பெய்ஜிங்கில் 44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்! 80,000 பேர் வெளியேற்றம்

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில்மேலும் படிக்க...
நடுவானில் கடுமையாக குலுங்கிய டெல்டா விமானம்; 25 பேர் காயம்

அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் இருந்து புதன்கிழமை (30) மாலை ஆம்ஸ்டர்டாம் நோக்கி 275 பயணிகளுடன் பயணித்த டெல்டா விமானம் ஒன்று நடுவானில் கடுமையான குலுங்களை சந்தித்துள்ளது. இதனால், விமானத்தில் பயணித்த பல பயணிகள் காயமடைந்தனர். அதேநேரம் விமானம், மினியாபோலிஸ்-செயின்ட் பால்மேலும் படிக்க...
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூட்டணி குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணியில்மேலும் படிக்க...
மகாராஷ்டிரா குண்டுவெடிப்பு; குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை

மகாராஷ்டிராவின் மாலேகானில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பின் 17 ஆண்டுகளுக்கு பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்பட ஏழு குற்றவாளிகளையும் நீதிமன்றம் இன்று (31) விடுவித்தது. வெறும் சந்தேகத்தால்மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளுக்-கான விசேட சலுகைகள் ரத்து செய்யப்படும் – சட்டமூல வரைவு வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்புக்கமைய இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் அரச உத்தியோகபூர்வ இல்லம், மாதாந்தமேலும் படிக்க...
அமெரிக்க தீர்வை வரி இன்று முதல் அமுல் – அதனைத் தடுக்கும் முயற்சி தோல்வி:ஐ. தே. கட்சியின் முன்னாள் பா. உறுப்பினர்

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருக்கும் 30வீத தீர்வை வரி இன்று முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில், வரியை குறைத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு சென்ற அரசாங்கத்தின் தூதுக்குழுவினரால் அதனை செய்ய முடியாமல் போயிருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரியமேலும் படிக்க...
இனியபாரதி தலைமையில் நடந்தாக கூறப்படும் முக்கிய கொலை சம்பவங்கள் – சடலங்களை தோண்டும் பணிகள் ஆரம்பம்

கடத்தப்பட்டு காணாமல் போன் 18 வயதான பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்நெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடம் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்பப்பட்டுள்ளன. இதன்படி, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில்மேலும் படிக்க...
கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல்

மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல் நேற்று (30) கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றது. வெளியுறவுக் கொள்கை விடயங்கள் மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ளமேலும் படிக்க...
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார

மாலைதீவுக்கான தனது மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். அதன்படி, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மாலைதீவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-104 விமானம் மூலமாக நேற்றிரவு 10:05 மணியளவில் கட்டுநாயக்க,மேலும் படிக்க...
