Day: July 22, 2025
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கமே பொறுப்பு -கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறதா என்பது குறித்து இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களைமேலும் படிக்க...
செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு

செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான இலங்கை மூலோபாயக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பங்காண்மை மற்றும் அறிவுப்மேலும் படிக்க...
சர்வதேச நாணய நிதியத்தியத்தின் பணியில் இருந்து கீதா கோபிநாத் விடை பெறுகின்றார்

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் பொருளாதாரத் துறையில் ஆரம்பமேலும் படிக்க...
இஸ்ரேலிய படையினர் எங்கள் பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனை: கைதும் செய்துள்ளனர் – உலக சுகாதார ஸ்தாபனம்

இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது எனமேலும் படிக்க...
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 2ம்மேலும் படிக்க...
இலங்கையர்-களுக்கு தென் கொரியாவில் 8 மாத வேலை வாய்ப்பு

தென் கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை (பருவகால தொழிலாளர்கள்) கீழ் இலங்கை தொழிலாளர்களை இணைத்துக் கொள்வதற்குமேலும் படிக்க...
அன்று யாழ்ப்பாண ரயிலேறி குரோதம், பிரிவினை: இன்று நாம் சகோதரரத்துவம் கொண்டு வருகின்றோம் – மகேஷ் அம்பேபிட்டிய

அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையையே கொண்டு வந்தனர். அதன்மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்தி வருகின்றோம்.”- என சோசலிச இளைஞர் சங்கத்தின்மேலும் படிக்க...
கனடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 181 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப் பொருள் கடத்த முயன்றதற்காக 37 வயது கனடிய பெண் ஒருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்க கூடுதல் இயக்குநர் ஜெனரலும்மேலும் படிக்க...
புதிய பிரதம நீதியரசராக பிரிதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை

உயர் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சூரசேனவின் பெயரை அடுத்த பிரதம நீதியரசராகப் பரிந்துரைத்து அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாளை நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.மேலும் படிக்க...
