Day: July 19, 2025
ரஃபாவில் உணவு உதவி மையங்களுக்கு அருகில் இஸ்ரேல் தாக்குதல் – 50 பேர் உயிரிழப்பு
காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனிய நகரமான ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உணவு உதவி மையங்களுக்கு அருகில் இன்று சனிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசாவில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் பட்டினியில் இருப்பதாகமேலும் படிக்க...
இந்திய விமானங்களுக்-கான வான்வெளி தடையை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தமது வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை பாகிஸ்தான் ஒகஸ்ட் 24 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளும்,மேலும் படிக்க...
இனப் பிரச்சினை தீராமல் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது

76 வருடங்களாக நாட்டில் தீர்க்கப்படாமல் உள்ள சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சினைகள் , அவர்களுக்கு நடைபெற்ற அநியாயங்கள், அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய உரிமைகள், தொடர்பாக இதுவரை எவராலும் பேசப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். நாட்டிற்கு சிறந்த ஒரு வளர்ச்சி தேவையென்றால்மேலும் படிக்க...
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக, இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை விவசாய நடவடிக்கைகளுக்காகமேலும் படிக்க...
அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயம்

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். திரப்பனை பகுதியில் இன்று சனிக்கிழமை (19) காலை லொறியொன்றுடன் வேனொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெகிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற வானில் 13 பேர் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
வெளிவிவகார அமைச்சரை சந்தித்த ரவி மோகன் மற்றும் கெனீஷா

இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் மற்றும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் கலந்துரையாடியுள்ளார். திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களைப் பற்றி இதன்போது கலந்துரையாடியதாக அமைச்சர் தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கையின்மேலும் படிக்க...
பாடசாலை மாணவிகள் மத்தியில் கருத்தரித்தல் அதிகரிப்பு

நாட்டில் பாடசாலை மாணவிகள் மத்தியில் கருத்தரித்தல் அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மேலும்மேலும் படிக்க...
மரக்கிளை முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மஸ்கெலியா புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் விறகு சேகரிக்க சென்றவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் இன்று (19 ) வீசிய காற்றின் காரணமாகமேலும் படிக்க...
பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றுடன் கூடியமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகள், எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்துச்செய்யும் சட்டமூலம் விரைவில்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள் தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும்மேலும் படிக்க...
