Day: July 18, 2025
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில்மேலும் படிக்க...
வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க நடவடிக்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்தவுடன் தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரத்யேக இடமொன்றை அமைக்க அமைச்சகம் தீர்மானித்துள்ளது. இந்த ஆண்டு ஒகஸ்ட்மேலும் படிக்க...
காசா: தேவாலயத்தை குண்டுவீசி அழித்த இஸ்ரேல்.. 2 பேர் பலி – போப் ஆண்டவர் கண்டனம்

காசாவில் சுமார் 1,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் உள்ளனர். பாலஸ்தீன முஸ்லிம்களுடனும் அவர்கள் இணக்கமான உறவைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்தது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும்மேலும் படிக்க...
உக்ரைன் நாட்டின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்

ரஷியாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். மார்ச் 2020 முதல் பிரதமராக இருந்த டெனிஸ் ஷ்மிஹால்,உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் ஆவார். இந்நிலையில் உக்ரைனின்மேலும் படிக்க...
சிரியா: உள்நாட்டு மோதல் நிறுத்தம் – படைகளை திரும்பப் பெற்ற அரசு

சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து ஸ்விடா மாகாணத்துக்கு கூடுதல் அரசுப்படைகள் அனுப்பப்பட்டன. இதில் ட்ரூஸ் மதத்தினர் மீது அரசுப்படைகள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து ட்ரூஸ் மதத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல், சிரியாமேலும் படிக்க...
“அகமதாபாத் விமான விபத்துக்கு விமானி தான் காரணம்” அமெரிக்க இதழின் அறிக்கையை மறுத்த விசாரணைக் குழு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (AAIB)மேலும் படிக்க...
தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தை மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது மாலை மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் ரோடு ஷோ மூலம் வாகனத்தில் நின்றவாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- 50 மாத தி.மு.க. ஆட்சியில்மேலும் படிக்க...
இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் – விசாரணைகளின் முன்னேற்றம் என்ன? :சட்டத்தரணி தனுக ரணஞ்சக

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தம்மால் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும், அது தொடர்பான எழுத்துமூல பதிலை எதிர்பார்ப்பதாகவும், முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். பதில் காவல்துறை மாஅதிபருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்திலேயே அவர் இதனைமேலும் படிக்க...
செம்மணிப் மனித புதைகுழியில் 4-5 வயதுடைய சிறுமியின் எலும்பு: அடுத்தது என்ன?

குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனித புதைகுழியில் நான்கு அல்லது ஐந்து வயதுடைய ஒரு சிறுமியின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாய்வினை நடத்திய தடயவியல் நிபுணர்கள், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். செம்மணி மனித புதைகுழியிலிருந்து நெருக்கமான தொடர்புடையவர்கள்மேலும் படிக்க...
யாழில் உதவி பிரதேச செயலாளர் உயிரிழந்த விவகாரம் – கணவர் கைது

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேசமேலும் படிக்க...
அமெரிக்க வரியை குறைக்க இன்று முக்கிய கலந்துரையாடல்

அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள தீர்வை வரியை குறைப்பதற்கான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று (18) அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டுமேலும் படிக்க...