Day: July 16, 2025
முதல் முறையாக இணையவழி ஏலத்தில் ரூ.6 கோடிக்கு விற்பனையான காந்தியின் ஓவியம்

லண்டன், போன்ஹாம்ஸில் ( Bonhams) நடந்த இணையவழி ஏலத்தில், காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. பிரித்தானியக் கலைஞர், கிளேர் லெய்டனால் (Clare Leighton) வரையப்பட்ட காந்தி ஓவியம், நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் மூன்று மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டது. இணையவழிமேலும் படிக்க...
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார். இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது 100 சதவீத கடுமையான பொருளாதாரமேலும் படிக்க...
“எந்த டெல்லி அணியுடைய காவி திட்டமும் தமிழ்நாட்டில் பலிக்காது” : சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.7.2025) கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், லால்புரத்தில், ஐயா எல். இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்துவைத்து ஆற்றிய உரை. வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. நம்முடைய அருமை பெரியவர்மேலும் படிக்க...
பொலிஸாரால் நிகழ்ந்ததாக கூறப்படும் மரணம் குறித்து மேலும் விசாரணை

பொலிஸாரினால் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடர்வாக, பிரேத பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்ற நபர், ஜூலை 11ஆம்மேலும் படிக்க...
21ஆம் திகதி முதல் மீண்டும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (15) எடுத்துக்கொள்ளப்பட்டது.மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்க கோரி கையொப்பம் சேகரிப்பு

‘சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று (16) புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது. இதன்போதுமேலும் படிக்க...
