Day: June 1, 2025
இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக 10,270 பேர் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நிலவும் சூழ்நிலையில் 05 மாவட்டங்களுக்குமேலும் படிக்க...
கிளிநொச்சியில் இளைஞன் மீது வாள் வெட்டுத் தாக்குதல்

கிளிநொச்சி – பூநகரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பிராய் குளத்தை அண்டிய பகுதியில், நேற்று (31) மாலை 6.30 அளவில் உந்துருளியில் பயணித்த இளைஞன் மீது சிலர் வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக,மேலும் படிக்க...
காசாவில் உணவு விநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் – 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம்

காசாவின் ரஃபாவில் உணவுவிநியோக நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா ஆதரவுடனான மனிதாபிமான உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவுகளை பெறுவதற்காக காத்திருந்தவேளை அந்த பகுதியைமேலும் படிக்க...
தாய்லாந்தைச் சேர்ந்த Opal Suchata Chuangsri உலக அழகியாக முடிசூடினார்

தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri ) 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக முடி சூடியுள்ளார். 72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்று இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஹைடெக்ஸ் (HITEX ) அரங்கில்மேலும் படிக்க...
ஆறு மாத காலத்துக்குள் அரசை குறைகூற முடியாது ; முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச தெரிவிப்பு

நாட்டில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆறு மாத காலத்துக்குள் அரசாங்கத்தை குறை கூற முடியாது. ஊழல் மோசடியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் தான் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை உருவாக்கினோம். இந்த சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளைமேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 511 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை முடிந்து 1,170 பேர் வீடு திரும்பியுள்ளனர் என இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாமேலும் படிக்க...
யாழ். நூலகம் தீயூட்டி எரிக்கப் பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா மற்றும் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரியூட்டப்பட்டதைமேலும் படிக்க...
தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைத்த நகைகளை திருப்பி தருமாறு பெண் ஒருவர் கோரிக்கை

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம்(31) நடைபெற்றமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உரியநீதி வேண்டும்! ரவிகரன் வலியுறுத்தல்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க புதிய அரசு முன்வர வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில்மேலும் படிக்க...
ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு, சீன வர்த்தக அமைச்சர் ஆகியோருடன் பிரதமர் சந்திப்பு

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளிகளுடனான உறவுகளை கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இடையே நேற்றையதினம் அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெற்றன. அதன்படி, பிரதமர் கலாநிதிமேலும் படிக்க...
