Day: May 25, 2025
தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் குறித்த திகதிக்குப் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும்மேலும் படிக்க...
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் மருத்துவர் ஒருவரின் பத்து பிள்ளைகளில் 9 பிள்ளைகள் கொல்லப்பட்டனர். வைத்தியர் அலா அல் நஜார் என்பவரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அவரது கணவரும் பிள்ளையொன்றும் காயமடைந்துள்ளனர் என நாசெர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும் படிக்க...
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் பலி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், கடந்த வாரம் பேச்சுவார்தையின் பின்னர் இரு நாட்டு போர்க்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதுடன் நேற்று முன்தினம் முதல்மேலும் படிக்க...
கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து

இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திருவனந்தபுரம் – விழிஞ்சம்மேலும் படிக்க...
இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

குஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தமேலும் படிக்க...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க வைத்திய பரிசோதனைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப்மேலும் படிக்க...
நாட்டை மாற்றுவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம் ; நளிந்த ஜயதிஸ்ஸ

நாம் மறுமலர்ச்சி காலத்தில் இருக்கிறோம். இந்த நாட்டை மாற்றுவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகிறோம். நாட்டின் எதிர்காலம் குறித்து எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதென சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 3,147 தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கும்மேலும் படிக்க...
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வர்த்தமானியை திரும்பப் பெற வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சட்ட உதவி – சுமந்திரன்

காணி சுவீகரிப்புக்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த வர்த்தமானியை அரசாங்கம் வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு இல்லாவிடின் மக்கள் போராட்டங்களையும் நடத்துவோம். தமது காணிகளை மக்கள் இழக்காமல் இருப்பதற்குரிய சட்ட ஆலோசனைகளை இலவசமாக வழங்குகிறோம்மேலும் படிக்க...
தமிழ் கட்சிகளுக்கு உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு – ஜனநாயக தேசியக் கூட்டணி

உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், தமது கூட்டணி முன்னிலை பெற்றுள்ள சபைகளில் மேயர் மற்றும் தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி அறிவித்துள்ளது. அதேநேரம், எந்தவொரு தேசியமேலும் படிக்க...