Day: May 18, 2025
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக மறுக்கிறேன் – ரணில் விக்கிரமசிங்க
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விவகாரத்தில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்வைத்துள்ள கூற்றுக்களை முற்றாக மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதிமன்ற சமர்ப்பிப்புகள் தன்னைப் பற்றி தவறாக வழிநடத்துவதாகவும் அவற்றில் சட்டப்பூர்வமாக குறைபாடுகள் உள்ளதாகவும்மேலும் படிக்க...
உப்பு பற்றாக்குறைக்கு தேவையற்ற அச்சமே காரணம் – லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர்

உப்பு பற்றாக்குறைக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் எனவும், இதுவேதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும், இதனால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்தார். மக்கள் 10 தொடக்கம் 12 பக்கெட்மேலும் படிக்க...
அற்ப அரசியலுக்காக இனவாதம் பேசும் அரசியல் வியாபாரிகளுக்கு காலம் சிறந்த பாடத்தை கற்பிக்கும்

அற்ப அரசியலுக்காக இனவாதம் பேசி தேசிய மக்கள் சக்தியையும், தமிழ் பேசும் மக்களையும் பிரிக்க முற்படும் அரசியல் வியாபாரிகளுக்கு காலம் சிறந்த பாடத்தை கற்பிக்கும்.என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், எப்படியான அரசியல் சூழ்ச்சிகள்மேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் நாளை திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவீரர் சேவைமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் – த.வெ.க. தலைவர் விஜய்

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் குறித்தமேலும் படிக்க...
புதிய பாப்பரசரைச் சந்தித்த பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பெய்ரூ

பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பெய்ரூ, புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பதின்நான்காம் லியோவைச் சந்தித்துள்ளார். மே 18, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பு ரோம் நகரின் சென்.பீட்டர்ஸ் திருச்சபையில் வைத்து இடம்பெற்றது. அங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புதிய பாப்பரசரின் கீழ் முதலாவதுமேலும் படிக்க...
Orly விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தில் கோளாறு: இன்று 40% விமானங்கள் ரத்து!

பரிஸ்-ஓர்லி (Aéroport d’Orly) விமான நிலையத்தில் இன்று பிற்பகல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், விமானங்களுக்கு இன்று நள்ளிரவு வரை இடையூறுகள் ஏற்படும் என “விமான போக்குவரத்து துறை”(l’Aviation civile-DGAC) அறிவித்துள்ளது. மே 18 ஞாயிறு பிற்பகலில்மேலும் படிக்க...
இலங்கை தமிழரசு கட்சி திருகோண மலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சி நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (மே-18) மாலை 4 மணியளவில் திருகோணமலை காளி அம்மன் கோயில் முன்றலில் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அணியினர் இணைந்து முள்ளிய வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்தினர். இதில் திருகோணமலை மாவட்டமேலும் படிக்க...
தமிழினப் படுகொலைக்கான பொறுப்புக் கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய எடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளை ஆதரிக்கிறோம் – கனேடிய பிரதமர்

பொறுப்புக் கூறலுக்கும் உண்மை , நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்ணி தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு கனேடியப் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறுமேலும் படிக்க...
கொழும்பு – ப்ளூமெண்டல் பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் படுகாயம்

கொழும்பு – ப்ளூமெண்டல் ரயில் கடவைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இன்று (18) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்றையமேலும் படிக்க...
பல்லாயிரக் கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று ஞாயிற்றுக்கிழமை (18) பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும்மேலும் படிக்க...
ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறார்களை போர் என்ற போர்வையில் அரசு இனப்படுகொலை செய்தது ; முன்னாள் தவிசாளர் நிரோஸ்

அரசாங்கம் நடத்திய மனிதாபிமானமற்ற போரில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலைகள் அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ள நிலையிலும் சிறுவர் விடயத்தில் ஏனும் பொறுப்புக்கூறவோ அல்லது நீதியை நிலைநாட்டவோ அரசு தயாரில்லை. கொல்லப்பட்டவர்கள் தமிழ்க் குழந்தைகள் என்பதால்மேலும் படிக்க...
கொழும்பில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இம்முறையும் 16 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில்மேலும் படிக்க...
273 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியது ரஸ்யா – உக்ரைன் மீது உக்கிர தாக்குதல்

ரஸ்யா மிகக்கடுமையான ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் 2022 இல் யுத்தம் ஆரம்பித்த பின்னர் ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகவும் உக்கிரமான ஆளில்லா விமானதாக்குதல் இதுவென குறிப்பிட்டுள்ளது. ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல் காரணமாக உக்ரைன் தலைநகரில் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்,மூவர் காயமடைந்துள்ளனர்மேலும் படிக்க...
பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்திய ரகசிய தகவல்களை அளித்த ஹரியானா யூடியூபர்?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பிரபலமான இடங்கள்மேலும் படிக்க...
வேகமாக வளரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில்

வேகமாக வளரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3% வளர்ச்சி பெறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை , அடுத்த ஆண்டு இந்தியாவின்மேலும் படிக்க...
இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள சிக்கல்களுக்கு சுமூகத்தீர்வு காண நடவடிக்கை! பாகிஸ்தான் பிரதமர்

இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள மோதல்களை அமைதியான முறையில் இருதரப்பும் அமர்ந்து பேசி சுமூகத்தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில், நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைமேலும் படிக்க...
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற சந்தேக நபரும், குற்றத்திற்கு உதவியமேலும் படிக்க...
மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் மிதந்துவந்த நினைவு தூபி

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் தமிழின அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு தூபிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்புமேலும் படிக்க...
