Day: April 30, 2025
சுவீடன் துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது

சுவீடன் நாட்டின் உப்சாலா நகரில் செவ்வாய்க்கிழமை (29) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பதின்ம வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்தனர். நகரின் மையத்தில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்தில் நடந்தமேலும் படிக்க...
யாழில் 310 கிலோ கிராம் கேரள கஞ்சா சிக்கியது

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கஞ்சா போதைப்பொருளை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா, இரண்டு படகுகள், மற்றும் கைது செய்யப்பட்ட இருவரும்மேலும் படிக்க...
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சினைகளை புதிய அரசாங்கத்தின் கீழ் தீர்ப்பதற்கான முக்கிய கலந்துரையாடல்

முஸ்லிம் சிவில் அமைப்புகளின் தலைவர்களுக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை (30) நடைபெற்றது. முஸ்லிம் சமூகம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புதிய அரசாங்கத்தின் கீழ் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இதன் நோக்கமாக அமைந்தது. இந்த கலந்துரையாடலில் அமைச்சர்மேலும் படிக்க...
லஷ்கர் இ தொய்பா தலைவரின் மறைவிடத்தை வெளிப்படுத்திய இந்திய ஊடகம்

லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவரும் 26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவருமான ஹபீஸ் சயீத் (Hafiz Saeed), பாகிஸ்தான் அரசாங்கத்தின் கடுமையான பாதுகாப்பின் கீழ் லாகூரில் வசித்து வருவதாக “இந்தியா டுடே” கூறியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியாக இருப்பவர் அடர்த்தியானமேலும் படிக்க...
பிரதமர் மோடி தலைமையில் கூடிய ‘சூப்பர் கேபினட்’ கூட்டம்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 உயிரிழந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (30) மத்திய அமைச்சரவை அமைச்சர்களுடன் முக்கிய சந்திப்புகளை நடத்தினார். அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்குமேலும் படிக்க...
கோடிக் கணக்கில் சொத்துக்களை கையகப் படுத்திய பெண் கைது

போலி ஆவணங்களைத் தயாரித்து சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களைப் கையகப்படுத்திய பெண் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்ற விசாரணை பிரிவு கைது செய்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைதுமேலும் படிக்க...
பாதுகாப்பு செயலாளர் – பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கிடையில் சந்திப்பு

தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு கலந்துரையாடலின் ஒரு அங்கமாக, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தா மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு செயலாளருடன் இலங்கைமேலும் படிக்க...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு அடுத்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் தலைமையில்மேலும் படிக்க...
