Day: April 15, 2025
அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம் காந்த பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா

அமெரிக்காவுக்கு கனிமங்கள், உலோகம், காந்த பொருட்கள் ஏற்றுமதியை சீன அரசு நிறுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ராணுவத் தளவாட உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார் புதிய அதிபர் டொனால்ட்மேலும் படிக்க...
மாநில உரிமைகளைப் பாதுகாக்க உயர்நிலைக் குழு: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில சுயாட்சி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.15) விதி எண் 110-ன் கீழ் முதல்வர்மேலும் படிக்க...
‘வரிகளை தவிர்க்க வசதிபடைத்த இந்தியர்கள் வருமானத்தை குறைத்து காட்டுகிறார்கள்’ – ஆய்வறிக்கை

வரிகளைத் தவிர்ப்பதற்காக வசதிபடைத்த இந்தியர்கள் தங்கள் வருமானத்தைக் குறைத்துக் காட்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய கணக்குகளை ஆய்வு செய்யும் ஒரு ஆய்வறிக்கை, மக்களவை எம்.பி.க்கள் தெரிவித்துள்ள சொத்துக்களை மாதிரியாகக் கொண்டு நடத்திய ஆய்வில், வசதிபடைத்த இந்தியர்கள் தங்கள் வருமானத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகக்மேலும் படிக்க...
சூடானின் டார்ஃபர் பகுதியில் துணை இராணுவப் படையினர் தாக்குதல் – 400 பேர் பலி
சூடானின் டார்ஃபர் பகுதியில் துணை இராணுவப்படையினர் அண்மையில் நடத்திய தாக்குதல்களில் 400 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. நம்பகமான ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள் சபை இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. சூடான் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட டார்ஃபர் மாநிலத்தின்மேலும் படிக்க...
3 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தொழிலுக்காக வெளிநாடு பயணம்
கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் தொழில் நிமித்தம்மேலும் படிக்க...
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்களை மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு ஒப்படைக்குமாறு அறிவிப்பு

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அந்த மனுக்கள் மற்றும் வழக்குத் தீர்ப்புக்களின் பிரதிகளைக் குறித்த மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதற்குமேலும் படிக்க...
யானை தாக்கியதில் குடும்பஸ்தா் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, காட்டு யானையின் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாா். நேற்று அதிகாலை வேளையில் , வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் புத்தாண்டுக் கொண்டாடத்தில் ஈடுபட்டிருந்த 31மேலும் படிக்க...
பிள்ளையானுடன் கலந்துரையாட ரணில் விடுத்த கோாிக்கை நிராகாிப்பு

நீதிமன்ற உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி குற்றப்மேலும் படிக்க...
34 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 34 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (15 ) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகமேலும் படிக்க...
தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் – கஜேந்திரகுமார்

யுத்த காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியே செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தமிழ் தேசியமேலும் படிக்க...
